இந்த செடி வைங்க.. பாம்பு தொல்லை இருக்காது!
பொதுவாக பருவக்கால மாற்றங்கள் ஏற்படும் பொழுது காடுகளில் வாழும் உயிரினங்கள் மனிதர்கள் வாழும் இடங்களுக்கு வருவது வழக்கம்.
உணவு மற்றும் உறைவிடம் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் உயிரினங்கள் மனிதர்கள் வாழும் இடங்களுக்கு வருகிறது.
இப்படி வரும் சமயத்தில் அவைகளுக்கு ஆபத்து என பயந்து, மனிதர்களை தாக்கி விடுகிறது. இதனால் தான் வனவிலங்கை பாதுகாப்பதற்கு ஒரு அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்கள், நகர்புறங்கள் என இரண்டிலும் பாம்புகளை பார்க்கலாம். இவற்றில் சில சாதுவாக இருந்தாலும் பாம்புகள் தன்னை மனிதர்கள் தீண்ட நினைக்கிறார்கள் என பயத்தில் அவர்களை தாக்கி விடும். இதனால் ஏகப்பட்டவர்கள் மரணித்து இருக்கிறார்கள்.
பாம்புகள் அதிகம் நடமாடும் இடங்களில் குறிப்பிட்ட சில செடிகளை வளர்த்தால் பாம்புகள் வருவது குறைந்து விடும். செடிகளின் வாசணை மற்றும் அமைப்பு காரணமாக பாம்புகள் அவ்விடத்திற்கு வருவதில்லை.
அந்த வகையில், பாம்புகளை கண்டவுடன் ஓட விடும் செடிகள் என்னென்ன? அதிலுள்ள வேறு பலன்கள் என்னென்ன என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
பாம்பை ஓட விடும் செடி
அநேகமான வீடுகளில் வளர்க்கப்படும் துளசி செடி வைத்திருந்தால் பாம்புகள் வீட்டிற்கு வராது. அதே போன்று ஏகப்பட்ட மருத்துவ பலன்களை கொண்டிருக்கும் கற்றாழை செடிகளையும் வீட்டில் வளர்ப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஏனெனின் துளசி செடியில் உள்ள ஆழமான நறுமணம் விஷ உயிரினங்களை வீட்டிற்குள் நுழைய விடாமல் பாதுகாக்கும். உதாரணமாக பாம்பு, தேள் போன்ற உயிரினங்கள் வராது. பாம்புகளை இது போன்ற செடிகள் மீது விட்டால், உடனடியாக அந்த இடத்தில் இருந்து ஓடி விடும் என்று லகான் சைனி என்ற ஆயுர்வேத நிபுணர் ஒருவர் கூறியிருக்கிறார்.
அதன் இலைகள் சளி மற்றும் தலைவலி போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக கொடுக்கப்படுகிறது. பாம்புகள் அதிகமாக நடமாடும் அச்சம் இருந்தால் காட்டு துளசி எனப்படும் ஒரு வகையான தாவரத்தை அந்த இடத்தில் வளர்க்க வேண்டும். இது உங்களை பாம்புகளில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும்.
ஏதோவொரு சந்தர்ப்பத்தில் நீங்கள் பாம்பு கடி வாங்கி வீட்டீர்கள் என்றால் உடனே கருப்பு மிளகு, நெய் மற்றும் காட்டுத் துளசியின் 2-3 இலைகள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து காயத்தின் மீது வைக்க வேண்டும். இது பாம்பு, தேள் போன்ற விஷமுள்ள உயிரினங்களின் விஷத்தை நடுநிலையாக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |