திருமணத்திற்கு காத்திருந்த மாப்பிள்ளைக்கு பெண் வீட்டார் கொடுத்த டுவிஸ்ட்! இதெல்லாம் ஒரு காரணமா?
திருமணத்தை நிறுத்த மணப்பெண் கூறிய காரணம் பார்ப்பவர்களை வியப்படைய வைத்துள்ளது.
திருமணம் என்றால் என்ன தெரியுமா?
பொதுவாக திருமணம் என்றால் ஒரு ஆணையும், ஒரு பெண்ணையும் சம்பிரதாயங்களின் படி, பெற்றோர்களின் சம்பதத்துடன் சேர்த்து வைக்கும் ஒரு வைபவமாகும்.
இந்த சடங்களின் படி இரண்டு பேர் ஒன்று சேர்ந்தால் இறைவனின் அருளால் நீண்ட நாட்கள் வாழ்வார்கள் என நம்புகிறார்கள்.
ஆனால் சிலரின் வாக்குவாதங்கள் மற்றும் புரியாமையால் இந்த உறவை பாதியில் முடித்து கொள்கிறார்கள்.
இதன்படி, இந்தியாவில், உத்தர பிரதேச மாநிலத்தின் பகுதியில் சோனி என்ற பெண்ணிற்கும், பகன்வா கிராமத்தைச் சேர்ந்த ராம்சங்கர் என்ற இளைஞருக்கும் திருமணம் செய்து வைக்க பெரியோர்களால் நிச்சயிக்கப்படுகிறது.
ஆனால் இவர்களின் திருமணம் நடக்கவில்லை ஏனெனின் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தின் போது அதிகமான வரதட்சனை கேட்டுள்ளார்கள்.

திருமணத்தை நிறுத்த இதுதான் காரணமாம்
இப்படியான ஒரு பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பெண் வீட்டில் பெண்ணின் 12 ஆம் வகுப்பு புள்ளிகள் குறைவாகவுள்ளது என்ற காரணத்தை கூறியுள்ளார்கள்.
இதனால் கடுப்பான மாப்பிள்ளை வீட்டார் தொடர்ந்து சண்டையிட்டு கொண்டிருந்ததால் பெண் வீட்டார் பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணையில் வரதட்சனை கொடுமை வெளியில் வந்துள்ளது. இதனால் தான் இந்த திருமணம் நடக்கவில்லை எனவும் குற்றம் கண்டுபிடிக்கபட்டுள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த இணையவாசிகள் “திருமணத்தை நிறுத்த இதெல்லாமா ஒரு காரணம்” என கலாய்த்துள்ளார்கள்.