மெட்ரோ ரயிலில் திருமணத்திற்கு சென்ற மணப்பெண்! காரணம் என்ன?
மணப்பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு மெட்ரோ ரயிலில் பயணித்து வந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ரோ ரயிலில் மணப்பெண்
பெங்களூர், சென்னை போன்ற பெரிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது அதிகமாகவே இருக்கும். இதனால் அங்கு வாழும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதை நாம் காண முடிகின்றது.
ஆனால் இங்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக மணப்பெண் ஒருவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளார். இந்த சம்பவம் பெங்களூரில் நடைபெற்றுள்ளது.
திருமணத்திற்கு தயாரான மணப்பெண் தனது குடும்பத்தினருடன் காரில் வந்து கொண்டிருந்த தருணத்தில், எதிர்பாராத விதமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்ததால், எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் முகூர்த்த நேரத்திற்கு திருமண மண்டபத்திற்கு செல்லமுடியாத நிலையில் இருந்த அவர்கள், திடீரென ஒரு முடிவை எடுத்துள்ளனர். தான் பயணித்து வந்த காரை போக்குவரத்து நெரிசல் உள்ள இடத்தில் நிறுத்திவிட்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டனர்.
பின்பு குடும்பத்தினர் அனைவரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததோடு, மணப்பெண்ணும் மெட்ரோ ரயிலில் பயணித்து திருமணத்திற்கு வந்துள்ளார்.