பீட்சா டெலிவரி பெண்ணுக்கு தர்ம அடி! 4 பெண் ராட்சஷிகளின் அதிர்ச்சி காட்சி
சமூக வலைதளங்களில் வைரலான இந்த வீடியோவில், 4 பெண்கள் ஒன்று சேர்ந்து பீட்சா டெலிவரி பெண்ணை கடுமையாக தாக்குவது போல் தெரிகிறது.
ஒரு பெண் தன் கையில் ஒரு குச்சியையும் வைத்திருக்கிறாள், அதன் மூலம் அந்தப் பெண்ணை அடிக்கிறாள். இந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண் அலறி துடித்து அழுவதையும் நாம் காண முடிகிறது.
மேலும் அந்த பெண்ணின் முடியை இழுத்து தள்ளி சாலையில் வீசியுள்ளனர். இறுதியாக எப்படியோ எழுந்து இந்த நான்கு பெண்களிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் ஒரு வீட்டை நோக்கி ஓடுவதையும் நாம் இந்த வீடியோவில் காண முடிகிறது.

இதற்கிடையில் தாக்கப்பட்ட பெண் பீட்சா டெலிவரி செய்பவராக வேலை செய்வதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் தங்களை முறைத்து கொண்டிருந்ததாகவும், பின்னர் தன்னைத் தாக்கியதாகவும் நான்கு சிறுமிகள் குற்றம் சாட்டினர்.
மேலும் இந்த வீடியோ இணையத்தில் தற்போது வெளியாகி வேகமாக பரவிய நிலையில் வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
A female employee was thrashed by 4 women in Madhya Pradesh's Indore. The video of the incident shows four women beating up the victim, a pizza chain employee, using sticks and fists, for allegedly staring at them.#Indore #MadhyaPradesh #Dominos #Pizza #Assualt #Viral #India pic.twitter.com/t6SsmhiiW8
— Anjali Choudhury (@AnjaliC16408461) June 13, 2022