முடக்கு வாதத்துக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும் பிரண்டை சட்னி... எப்படி செய்வது?
பொதுவாக, மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் பற்றைக்காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரக்கூடிய பிரண்டை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கக்கூடிய காய்கறியாகும்.
இதில் உடல் ஆரோக்கியத்துக்கு தேவைாயான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. பிரண்டையில் அமைரின், அமிரோன், சிட்டோசிரால் மற்றும் வைட்டமின் சி ஆகியவை காணப்படுகின்றன.

இது இரத்த மூலம், வயிற்றுவலி ஜீரணகோளாறுகளை சரி செய்கிறது. மேலும் ஒழுங்காக மாதவிடாய் கோளாறு, ஆஸ்துமா, ஆகியவற்றை ஆற்றல் கொண்டது.
அதனை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால், உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும், ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும்.
எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் இணைவதற்கும் பிரண்டை துணைப்புரிகின்றது. பிரண்டை மூட்டு வலி மற்றும் முடக்கு வாதத்துக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும் அருமருந்தாககும்.

இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த பிரண்டையை கொண்டு எவ்வாறு அசத்தல் சுவையில் சட்னி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரண்டை - 2 கட்டு
நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி + 1/2 மேசைக்கரண்டி
வரமிளகாய் - 6
உளுத்தம் பருப்பு - மேசைக்கரண்டி
பூண்டு - 6 பல்
சின்ன வெங்காயம் - 10
கறிவேப்பிலை - 1 கொத்து
புளி - நெல்லிக்காய் அளவு
தேங்காய் - 1/2 கப்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு நல்லெண்ணெய் - 3 தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1/2 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி
வரமிளகாய் - 1

செய்முறை
முதலில் பிரண்டையை நன்றாக கழுவி சுத்தம் செய்து, கையில் எண்ணெய் தடவிக் கொண்டு, பிரண்டையின் கூர்மையான 4 முனைகளையும் கத்தியால் நீக்கி, துண்டுகளாக நறுக்கி தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்ததை அடுப்பில் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாயை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதையும் மிளகாயுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்பு அதே எண்ணெயில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தையும் போட்டு நன்கு கண்ணாடி பதத்துக்கு வதக்கி, அதையும் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதே பாத்திரத்தில் கூடுதலாக 1/2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து துண்டுகளாக்கி வைத்துள்ள பிரண்டையை போட்டு, கறிவேப்பிலையும் சேர்த்து நிறம் மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் புளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின்னர், துருவிய தேங்காயை சேர்த்து வதக்கி இறக்கி ஆறவிட வேண்டும்.
அதனையடுத்து ஒரு மிக்சர் ஜாரில் வரமிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து நன்றாக அரைத்துக் வைத்துக்கொள்ள வேண்டும்.

பின் அத்துடன் வதக்கிய மற்ற வெங்காயம், பூண்டு, பிரண்டையையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக்டிகொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு சிறிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் பிரண்டை சட்னி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |