முதன்முறையாக விமானத்தை ஓட்டும் பைலட்டின் சட்டை கிழிக்கப்படுவது ஏன்?
விமான பைலட்கள் முதன் முதலாக விமானத்தை இயக்கியது அவர்களின் சட்டையின் பின் பகுதி கிழிக்கப்படுவது ஏன் என்ற காரணத்தை இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
விமானத்தினை இயக்கும் பைலட்கள் பலரது சட்டை பின் பகுதி கிழிந்தும், அதில் சில எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளும் உள்ள நிலையில் இதற்கு என்ன காரணம் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
கிழிக்கப்படும் சட்டை
பைலட்டுகளின் சட்டையின் பின் பகுதி கிழித்து தொங்கவிடுவது என்பது அவர்களை கௌரவிக்கும் வகையில் செய்யப்படும் பாரம்பரியமான நடவடிக்கையாகும்.
பைலட் பயிற்சி பெறும் மாணவர்கள், முதல் முதலாக விமானத்தை தனியாக இயக்கிய பின்பு அவர்களின் சட்டையின் பின் பகுதி கிழிக்கப்படும். இதனை மாணவரின் வழிகாட்டி தான் செய்வாராம்.
ஒரு விமானத்தை தனியாக முதன்முதலாக இயக்குவது என்பது சாதாரண காரியம் இல்லை. வழிகாட்டியின் தலையீடு இல்லாமல் தாங்கள் கற்றுக் கொண்டு அனைத்து விடயத்தையும் சுயமாகவே செய்ய வேண்டும்.
விமானத்தில் டேக் ஆஃப் செய்வதும், லேண்ட் செய்வதும் தான் மிகவும் சவாலான விடயங்கள் ஆகும். விமானத்தை தனியாக இயக்குவது என்பது பைலட் லைசென்ஸ் பெறுவதன் முக்கியமான ஒரு பகுதி.
எனவே முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கும்போது, அந்த முயற்சியில் வெற்றியடைய வேண்டும் என்பதில் புதிய பைலட்கள் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் முதல் முறையாக விமானத்தை தனியாக இயக்கிய பின்பு நடக்கும் விஷயம்தான் நமக்கு ஆச்சரியம்.
காரணம் என்ன?
விமானத்தை தனியாக இயக்கிவிட்டு வந்த பின்பு சடடையின் பின் பகுதியை அவரது வழிகாட்டி கத்தரி கோலால் கிழிப்பார். அவ்வாறு கிழித்த சட்டையில், அந்த புதிய பைலட்டின் பெயர், அவர் தனியாக இயக்கிய விமானத்தின் விபரம் எழுதப்படும்.
மேலும் ரன்வே மற்றும் விமானத்தின் குறியீடு போன்ற அம்சங்களும் குறிக்கப்படுமாம். இதைத் தான் பைலட் பயிற்சி பள்ளிகள் தங்கள் வளாகங்களில் கௌரவமாக தொங்கவிடுகின்றனர்.
இந்த நிகழ்வு, வழிகாட்டிகள் புதிய பைலட்டான தங்கள் மாணவர்கள் மீது வைக்கின்ற நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
தொடர்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தாலும், ஒன்றன் பின் ஒன்றாக அமரக்கூடிய இருக்கை அமைப்பு காரணமாகவும், மாணவ பைலட்கள் மற்றும் வழிகாட்டிகள் பேசி கொள்வது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாக இருந்தது.
எனவே மாணவர்களை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால், அவர்களுடைய சட்டையின் பின் பகுதியை வழிகாட்டிகள் பிடித்து இழுக்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
