உயிருக்கு ஆபத்தாக மாறும் ஊறுகாய்! இதய நோயாளிகள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
உணவு பிரியர்களில் பலர் ஊறுகாய் அடிமையாக தான் இருப்பார்கள்.
எந்த உணவாக இருந்தாலும் ஊறுகாய் எடுத்து கொள்ள முடியும்.
ஊறுகாய் சுவை மிகுந்ததாக இருந்தாலும் அன்றாடம் இதை உட்கொள்ளும் போது பல ஆபத்துக்களை சந்திக்க நேரிடும்.

ஆபத்தாக மாறும் ஊறுகாய்
- ஊறுகாயை தொடர்ந்து உட்கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- அதில் அடிவயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும்.
- ஊறுகாயில் உள்ள எண்ணெய் இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.
- ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிகம் இருப்பதால் அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும்.
- ஊறுகாயை இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும்.
- உடை அதிகரிப்புக்கு உறுகாயில் உள்ள எண்ணை காரணம்.
- ஊறுகாயில் இருக்கும் அதிகப்படியான உப்பு வீக்கம், நீர் தேக்கம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
தினமும் ஊறுகாய் சாப்பிட வேண்டாம்
ஊறுகாய் பிரியர்கள் அதன் சுவையை பெற வேண்டும் என்று விரும்பினால், வீட்டில் தயாரிக்கப்பட்ட சீரான அளவு உப்பு மற்றும் மசாலாப் பொருட்களைக் கொண்டுள்ள ஊறுகாயை சாப்பிடுங்கள்.
தினமும் ஊறுகாய் நுகர்வை தவிர்த்துக் கொள்ளலாம்.
கடைகளில் வாங்கும் ஊறுகாய்களை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

சுவையான மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
- மாங்காய் - 2 கப்
- சமையல் எண்ணெய் - 3
- தேக்கரண்டி கடுகு - 1
- தேக்கரண்டி பெருங்காயம் - 1
- தேக்கரண்டி வெந்தயத்தூள் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
- மிளகாய்தூள் - 3 தேக்கரண்டி
- உப்பு - சுவைகேற்ப
செய்முறை
ஒரு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொரிய விடவும்.
பிறகு மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம், வெந்தயத்தூள், மஞ்சள் தூள் ஆகியவை போட்டு 2 நிமிடம் கிளறவும்.
இந்தக் கலவையில் நறுக்கி வைத்துள்ள மாங்காவை சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி ஜாடியில் போட்டு அதனை துணியால் காற்று புகாதவாறு நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும்.
இந்த மசாலா மாங்காய்களுக்குள் ஊடுருவுவதற்காக ஒரு மாதம் வரை ஊற வைக்க வேண்டும்.
பிறகு அந்த பாட்டிலை ஒரு வாரத்திற்கு தினமும் இரண்டு முறை குலுக்க வேண்டும். ஒரு வாரம் ஆன பின்பு, அந்த பாட்டிலை 2 வாரத்திற்கு வெயிலில் தினமும் 5-6 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும்.
அவ்வாறு செய்யும் போது மாங்காய் துண்டுகள் மென்மையாவதோடு ஊறுகாயின் நிறமும் மாறிவிடும். இப்போது சுவையான ஊருகாய் தயார்.