மறுப்படியுமா? நிகஷனுடன் மீண்டும் கைக்கோர்க்கும் பிக்பாஸ் பிரபலம்- வைரல் புகைப்படங்கள்
நிக்ஷன் வெளியில் வந்தவுடன் மீண்டும் பிக்பாஸ் பிரபலத்துடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 13 வாரங்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா, ரவீனா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன்,விக்ரம், மாயா , விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா, மணிசந்திரா, வினுஷா, யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் ஆகிய உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதுவரையில் இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
அதிலும் கடந்த வாரம் நடந்த டவுள் எவிக்ஷனில் ரவீனா மற்றும் நிக்சன் வெளியேற்றப்பட்டனர்.
நிக்ஷனுடன் கைக்கோர்க்கும் ஜோவிகா
இந்த நிலையில் வெளியேறிய இருவரும் அவர் அவர் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டனர்.
அந்த வகையில் ரவீனா அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்த அனைத்து தவறுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
அதே வேளையில் நிக்ஷன், ஜோவிகா, விக்ரமுடன் இணைந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “ மறுபடியும் சேர்ந்துட்டீங்களா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |