குடும்பத்தை பிரித்து விட்டு பட்டு சேலையில் ஜொலிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பிரித்து விட்டு மணக்கோலத்தில் ஜொலிக்கும் தனத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸில் ஏற்படும் புதிய குளறுபடிகள்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் தொடர்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த சீரியல் மற்றைய சீரியல்கள் போல் அல்லாமல் சற்று வித்தியாசமாக கணவன் - மனைவி மற்றும் சகோதர்களுக்கு இடையிலான அன்பையும் அழகாக எடுத்து கூறுகிறது.
இதனை தொடர்ந்து கண்ணன் குடும்பத்தை பிரித்து மொய் எழுதி விட்டான் என்று கூறி ஜீவா மூர்த்தியிடம் சண்டைக்கு சென்றுள்ளார்.
இதனால் கடுமையான வார்த்தையால் மூர்த்தியை சத்தம் போட்டு நான், மீனாவின் வீட்டில் இருக்கேன் நீங்கள் அனைவரும் உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
இப்படியான நிலையில் , மிகுந்த கவலையுடன் வீடு திரும்பி மூர்த்தியை கண்ணனின் மனைவி ஐசு மீண்டும் கஷ்டப்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தை மூர்த்தியின் மனைவியாக இருக்கும் தனம் தான் ஆரம்பித்துள்ளார்.
புது பொண்ணு போல் ஜொலிக்கும் தனம்
இதனை தொடர்ந்து சண்டை மீண்டும் அதிகமாகி ஐசுவும் கண்ணனும் வீட்டை விட்டு சென்றுள்ளார்கள்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும், தனம் என்கிற சுஜிதா அவ்வப்போது அவரின் புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்ந்து வருகிறார்.
இவரின் சில புகைப்படங்கள் பார்ப்பதற்கு மார்டனாக இருக்கிறது. அந்த வகையில், அழகிய சேலை அணிந்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்,“ குடும்பத்தை பிரித்து விட்டு புது பொண்ணு போல் இந்த அலங்காரம் தேவையா? என கலாய்த்து வருகிறார்கள்.