மணமகன் கண்முன்னே எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் அழித்த போட்டோகிராபர்! இவ்வளவு கோபத்திற்கு காரணம் என்ன?
திருமணத்தில் புகைப்படம் எடுத்த புகைப்படக்காரரரை தான் அனுபவித்த கொடுமையினால் தான் எடுத்த புகைப்படத்தினை எல்லாம் அழித்துள்ள சம்பவம் வைரலாகி வருகின்றது.
பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அது மறக்க முடியாத நிகழ்ச்சியாகவும், நமது வாழ்வில் எந்தவொரு நிலையிலும் அது ஒரு மகிழ்ச்சியான நினைவாகவே இருக்கும்.
இதனால் அத்தருணத்தினை புகைப்படம் எடுப்பதற்கு செலவு செய்வதற்கு பெரும்பாலான நபர்கள் கஷ்டப்படுவதில்லை.
ஆனால் இங்கு நபர் ஒருவர் அத்தருணத்திற்கு செலவு செய்வதற்கு மனம் கஷ்டப்பட்டதோடு, புகைப்படம் எடுக்க வந்தவரையும் படாதபாடு படுத்தியதால் இறுதியில் அந்த தருணத்தினை எப்பொழுதும் புகைப்படமாக காண முடியாத அளவிற்கு புகைப்படக்காரர் தரமான சம்பவம் ஒன்றினை செய்துள்ளார்.
தனது திருமணத்தில் போட்டோஷூட் செய்வதற்கான பணத்தை மிச்சப்படுத்த நினைத்த மணமகன் தனது நண்பனையே திருமணத்திற்கான போட்டோகிராபராக அமர்த்தியுள்ளார்.
குறித்த நபரும் தனது நண்பருக்காக வெறம் 250 டொலர் பணத்திற்கு ஒப்புக்கொண்டதுடன், காலை 11 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை தனது உழைப்பினை நண்பனுக்காக கொடுத்துள்ளார்.
குறித்த புகைப்படப்படக்காரர் வெளியிட்ட தனது குமுறலில், நண்பர் திருமணத்திற்கு 250 டொலருக்கு புகைப்படம் எடுக்க ஒப்புக்கொண்டு அங்கு சென்ற போது, உணவு கூட சாப்பிட விடவில்லை.
மேலும் சோர்வு ஏற்பட்ட நிலையில், ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த நான் எடுத்த புகைப்படங்களை அனைத்தையும் மணமகன் கண்முன்னே அழித்து விட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்