அசல்டா பாம்பை பிடித்து போத்தலில் போட்ட சிறுவன்! ஒரு நிமிட அலண்டு நின்ற இணையவாசிகள்
வீட்டினுள் வந்த பாம்பை அசல்டாக கையில் பிடித்து போத்தலில் அடைத்த சம்பவமொன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிறுவனின் வீரச்செயல்
கர்நாடக மாநிலத்திலுள்ள தும்கூரு மாவட்டத்தில் சுமார் 9 வயது சிறுவனுக்கு பாம்பு எவ்வாறு பிடிப்பது என்பது குறித்து அவ்வபோது அவரது தந்தை கற்றுக் கொடுத்துள்ளார்.
பாம்பு பிடிப்பதில் ஆர்வமாக இருந்த சிறுவனுக்கு பக்கத்து தெருவிலுள்ள வீட்டில் சாரை பாம்பு புகுந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அந்த வீட்டிற்கு சென்ற சிறுவன், துளியும் பயமின்றி பாம்பை பிடித்து போத்தலில் அடைத்துள்ளான்.
வைரலாகும் புகைப்படங்கள்
தகவலறிந்த சிறுவனின் பெற்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்த்த போது சிறுவனின் கையில் பாம்பு இருந்துள்ளது.
ஆனால் அந்த பாம்பு சாரைபாம்பு என்பதால் சிறுவனுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையவாசிகளை ஊறைய வைத்துள்ளது.
மேலும் சிறுவனின் தைரீயம் பாராட்டத்தக்கது என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.