நீங்க இடது கை பழக்கம் உள்ளவர்களா? இவர்களிடம் கண்டிப்பாக இந்த குணங்கள் இருக்குமாம்
உலகில் பெரும்பாலானோர் தன்னுடைய இடது கையை பயன்படுத்தி தான் எல்லா வேலைகளையும் செய்வார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே இடது கையை பயன்படுத்துவார்கள்.
இவ்வாறு இடது கை பழக்கம் உள்ளவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என பலரும் பேசிக் கேட்டிருப்போம்.
வலது கை பழக்கம் அதிகம் உள்ளதாலும் இடது கை பழக்கம் கொண்டவர்கள் குறைவாக இருப்பதாலும் அதனை ஞாபகத்தும் வகையில் ஆகஸ்ட் 13 ஆம் தேதி சர்வதேச இடது கை பழக்கம் உள்ளவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்த தினம் முதன் முதலாக ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள இடது கைகள் கிளப்பால் கடந்த 1992 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
அந்த வகையில், இடது கை பழக்கம் உள்ளவர்களிடம் இருக்கும் தனித்துவமான பண்புகள் குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
இடது கை பழக்கம் உள்ளவர்களிடம் இருக்கும் பண்புகள்
1. இடது கை பழக்கம் உள்ளவர்கள் அன்றாடம் நாம் செய்யும் வேலைகளை இடது கையை பயன்படுத்திச் செய்வார்கள். அதே சமயம், இந்த உலகில் கண்டுபிடிக்கப்படும் அனைத்தும் வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு மாத்திரமே, அதை இலகுவாக இடது கை பழக்கம் உள்ளவர்கள் கற்றுக் கொண்டு பயன்படுத்துகிறார்கள். இந்த சவாலை போன்று அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் இலகுவில் முறியடித்து விடுவார்கள்.
2. மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இடது கை பழக்கம் உள்ளவர்கள் பொறுமைசாலியாக இருப்பார்கள். எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் பொறுமையாக கையாள்வார்கள். ஏனெனின் பிணக்குகளை சரியான முறையில் கையாளும் திறன் அவர்களிடம் இருக்கும்.
3. இடது கை பழக்கம் உள்ளவர்கள் அவர்களின் வலது மூளையை அதிகம் பயன்படுத்துவார்கள். இதனால் ஆக்கப்பூர்வமானவர்களாகவும், அதிக உள்ளுணர்வைக் கொண்டவராகவும் இருப்பார்கள். இவர்களிடம் இயற்கையாகவே கற்பனை திறன் அதிகமாக காணப்படும்.
4. மற்றவர்கள் போல் அல்லாமல் எல்லாவற்றையும் வித்தியாசமான கோணத்தில் இருந்து யோசிப்பார்கள். இடது கை பழக்கம் உள்ளவர்கள் குத்துச்சண்டை, டென்னிஸ், கோல்ஃப் போன்ற விளையாட்டுக்களில் சிறந்து விளங்குவார்கள். இவர்களிடம் தலைமைத்துவப்பண்புகள் அதிகமாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |