இந்த 4 வகை நெற்றில உங்க நெற்றி எப்படி இருக்கு?... உங்களது ரகசியம் இதுதான்
மனிதர்களின் நெற்றியின் வடிவத்தை வைத்தே அவர்களின் குணங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
ஒருவரின் ஆளுமை திறனைக் குறித்து தெரிந்து கொள்வதற்கு பிறந்த ராசி மற்றும் நட்சத்திரத்தினை தான் அதிகமாக பார்ப்பார்கள்.
ஆனால் ஒரு நபரின் முகம் மற்றும் சில அம்சங்களை வைத்தும் நாம் அவர்களின் ஆளுமையைக் குறித்து தெரிந்து கொள்ளலாம் என சாமுத்ரிகா சாஸ்திரம் கூறுகின்றது.
ஒருவரின் முகத்தில் அவர்களின் நெற்றி, மூக்கு, உதடுகள் போன்றவற்றின் வடிவத்தினைக் கொண்டு ஆளுமை பண்பினை தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் எந்தமாதிரியான நெற்றி உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அகலமான நெற்றி
அகலமான மற்றும் பெரிய நெற்றியை கொண்டவர்கள் பெரும்பாலும், புத்திசாலிகளாகவும் வலிமையான உள்ளுணர்வு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
விரைவாக எதையும் கற்றுக் கொள்ளவும், பல வேலைகளை செய்வதில் சிறந்தவர்களாகவும், திருப்தியான வாழ்க்கை வாழ்கிறவர்களாகவும், தனிமையிலும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
பெரும்பாலும் பெரிய வெற்றிகளையும் எளிமையாக பெற்றுக் கொள்ளும் இவர்களின் மோசமான குணம் என்னவெனில் அவர்களின் கோபம் ஆகும். இது அவர்களின் நல்ல பண்புகளைக் கூட மறைத்துவிடுமாம்.
குறுகிய நெற்றி
குறுகிய நெற்றியை கொண்டவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும், மூளை சொல்வதை விட இதயம் சொல்வதையே கேட்பார்கள்.
தனிமையில் விரும்பும் இவர்கள் அதில் மகிழ்ச்சியாகவே இருப்பார்கள். மிகுந்த பச்சாதாபம் கொண்டதுடன், மற்றவர்களுக்கு அதிகமாகவே உதவுவார்கள். மற்றவர்களை அதிகமாக நேசிக்கும் இவர்கள், அதிகமாக அலட்டிக்கொள்ளாமல் தனக்கான வாழ்க்கையையே வாழ்வார்கள்.
வளைந்த நெற்றி
வளைந்த நெற்றியை உடையவர்கள் நட்பானவர்களாகவும், எளிதாக எதையும் ஏற்றுக் கொள்பவர்களாகவும், அதிகமான நண்பர்கள் வட்டாரத்தை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
யாரிடம் எப்பொழுது பேச வேண்டும் என்பதை சரியாக அறிந்திருக்கும் இவர்களிடம் அதிகமான நம்பிக்கை காணப்படும். மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளை அமைதியாக கையாளக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
M வடிவ நெற்றி
M வடிவ நெற்றியைக் கொண்டவர்கள் கலை மற்றும் படைப்பாற்றலில் சிறந்தவர்களாகவும், புத்திசாலியாகவும் இருப்பார்கள். தங்கள் திறமையை வெளிப்படுத்தக்கூடிய சூழ்நிலைகளில், செழித்து வளர்கிறார்கள்.
அமைதியாகவும், பொறுமையாகவும் இருக்கும் இவர்கள் தங்களின் கோபத்தை அரிதாகவே இழக்கின்றனர். பெரும்பாலும் மற்றவர்கள் மீது வெறுப்பு கொள்ள மாட்டார்கள்.
அவர்கள் வாழ்க்கையை மிகவும் அழகாக வாழ்கிறார்கள் மற்றும் வாழ்க்கையில் தோல்விகளை திறமையாக சமாளிக்கும் இவர்கள், தனிப்பட்ட உறவுகளில் அனைவரையும் பாதுகாக்கும் பாதுகாவலராக இருப்பார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |