Super Singer: ஒரு கிராமத்தின் பலவருட ஏக்கம்! விஷ்ணுவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ராகவா லாரன்ஸ்
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள விஷ்ணு என்ற சிறுவனின் கிராமத்தின் பலவருட ஏக்கத்தை நடிகர் ராகவா லாரன்ஸ் தீர்த்து வைத்துள்ளார்.
சூப்பர் சிங்கர் ஜுனியர் 10
பிரபல தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். தற்போது சூப்பர் சிங்கர் ஜுனியர் நிகழ்ச்சியும் நடைபெற்று வருகின்றது.
10வது சீசனில் இருக்கும் இந்த நிகழ்ச்சியில் திறமையுள்ள சிறுவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமையினை வெளிக்காட்டி வருகின்றனர்.
குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மழலைகளின் குரல் நடுவர்களை மட்டுமின்றி பார்வையாளர்களையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், குறித்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை குருக்கலாம்பட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்ற சிறுவன் தனது திறமையால் பாடல் பாடி நடுவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த இந்த சிறுவனுக்கு அடுத்தடுத்து பல பரிசுகளை நடுவர்கள், தொகுப்பாளர்கள் வழங்கி அசத்தினர்.
இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் அந்த கிராமத்திற்கு குடிதண்ணீர் போர் போட்டு அந்த ஆசையையும் நிறைவேற்றியுள்ளார். இந்த உதவிக்கு அக்கிராம மக்கள் நேராகவே வந்த ராகவா லாரன்ஸிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |