உங்க பெயர் K எழுத்தில் ஆரம்பித்தால் அதிர்ஷ்டம் தான்... இந்த பண்புகள் கட்டாயம் இருக்கும்
எந்த ஒரு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல உங்கள் பெயருக்கான ஆளுமைகளும் பண்புகளும் அமையும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
அந்த வகையில் பெயரின் முதல் எழுத்து K என்ற எழுத்தில் ஆரம்பித்தால், அவர்கள் விசேட குணங்கள் மற்றும் ஆளுமைகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
விசேட பண்புகள்
கிங் என்றால் மிக பெரிய பட்டத்தை கொண்ட வார்த்தையே K என்ற எழுத்தில் தான் ஆரம்பிக்கின்றது. K என்ற எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறது என்றால் கண்டிப்பாக அவர்களுக்கு இயல்பிலேயே தன்னம்பிக்கை அதிகதாக இருக்கும்.
ஆண்களாக இருந்தால் ராஜாவை போன்றும், பெண்களாக இருந்தால் ராணியை போன்றும் தங்களை நினைத்துக்கொள்ளும் குணம் இவர்களிடம் கட்டாயம் இருக்கும்.
K என்ற எழுத்தில் பெயர் ஆரம்பித்தால் இவர்களின் கட்டுப்பாட்டில் தான் அனைவரும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
பார்ப்பதற்கு பொறுப்பற்றவர்கள் போன்று தோன்றினாலும் இவர்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்து விட்டால் அதற்காக தீவிரமாக உழைக்க ஆரம்பித்துவிடுவார்கள்.
இவர்களுக்கு கற்பனா சக்தி அதிகம். இது தான் இவர்களது பலம் என்று சொல்லலாம். இவர்கள் பெரும்பாலும் சாதாரணமாக இருப்பார்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் சில வாய்ப்புகள் கிடைத்தால் இவர்கள் அதை பயன்படுத்தி குறுகிய காலத்தில் நல்ல இடத்துக்கு வந்துவிடுவார்கள்.
எந்த நுணுக்கங்களை எங்கே பயன்படுத்த வேண்டும் என்று இவர்களுக்கு நன்றான தெரியும். K என்ற எழுத்து எந்த கிரகத்திற்கு ஒப்பாகும் என்றால் அது சந்திரன். இதனால் இவர்கள் அனைவருடனும் எளிதில் நட்பு கொள்ளக் கூடியவர்களாகவும் மனதளவில் மென்மையானவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களுக்கு கற்பனை சக்தி அதிகமாக இருப்பதால் திடமான மனது இவர்களுக்கு இருக்கும். தெளிவான சிந்தனை இவர்களிடம் உண்டு. நடக்க போவதை முன்கூட்டியே கணிக்க கூடிய ஆற்றல் இவர்களுக்கு இயல்பிலேயே இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |