இன்ஸ்டாகிராம் வெறியரா நீங்க? அப்போ இந்த டிப் உங்களுக்காக தான்!
தற்போது இருக்கும் நெட்வொர்க்கில் அதிகமான ஹெப்கள் வந்து விட்டது. ஆனாலும் பயனர்களின் ஆதரவை பெற்று சில ஹெப்கள் முதல் இடத்தில் இருக்கின்றது.
அந்த வகையில் வாட்சப், இன்ஸ்டாகிராம், யூடியூப் ஆகிய ஹெப்களை கூறலாம். இந்த ஹெப்பை இளைஞர்கள் மட்டுல்ல தொழிலதிபர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களும் பயன்படுத்துகிறார்கள்.
தன்னுடைய பொழுதை பயனுள்ளதாக கழிப்பதற்கு இன்ஸ்டாகிராம் ஒரு நல்ல ஹெப்பாகவும் பெரும்பாலானோருக்கு மிகவும் பிடித்தமான சமூகவலைத்தளமாவும் மாறியுள்ளது.
இதில் சில தவறான வேலைகள் செய்யப்படும் போது பயனர்கள் அந்த கணக்கை டெலிட் செய்வதற்கு தடுமாறுவார்கள்.
அதில், கணக்கை முழுவதுமாக டிலேட் செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்படலாம். அந்தவகையில் இன்ஸ்டாகிராம் கணக்கை தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ டெலிட் செய்வது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
டெலிட் செய்த கணக்கிலிருந்து பதிவுகளை மீண்டும் பெற..
இதனை தொடர்ந்து கணக்கை அழிக்கும் போது போட்டோ, வீடியோ, உங்களை பின்தொடர்பவர்கள் என அனைத்து அழிந்து விடும். நாம் முன்னாள் டெலிட் செய்த விடயங்களை மீண்டும் எப்படி பாதுகாப்பாக பதிவிறக்கிக் கொள்வது என்பதனை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
இன்ஸ்டாகிராம் open > புரொஃபைல் > மெனு > செட்டிங் > Request Download பட்டன் அழுத்தவும். > இ-மெயில் ஐடி > இவையனைத்தையும் சரியாக செய்து விட்டால் சுமார் 48 மணித்தியாலங்களுக்குள் போட்டோ, வீடியோ, சாட்டிங் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உங்கள் இ-மெயிலுக்கு வந்து விடும்.
இதன் பின்னர் உங்களின் கணக்கை முழுமையாக டெலிட் செய்து கொள்ளலாம். இந்த விடயத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஏதாவது பிரச்சினை வரும் கணக்கை டி-ஆக்டிவேட் செய்தால் தற்காலிகமாக தான் எல்லா விடயங்களும் அழியும். மீண்டும் ஆக்டிவ் செய்யும் போது எல்லா விடயங்களும் வந்து விடும்.
நிரந்தரமாக கணக்கை டெலிட் செய்ய வேண்டுமா?
Login இன்ஸ்டாகிராம் கணக்கு >account deletion > கணக்கை அழிப்பதற்கான காரணம் தெரிவு > பாஸ்வேர்ட் > டெலிட் ஆப்ஷன்
தற்காலிகமாக டி-ஆக்டிவேட் செய்வது எப்படி?
Login இன்ஸ்டாகிராம் கணக்கு > Profile >Edit Profile> select Temporarily disable my account > கணக்கை டி-ஆக்டிவ் காரணம் தெரிவு > பாஸ்வேர்ட்