இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவரா நீங்கள்? பணம் செலுத்தணுமாம்
டிவிட்டர் செயலியை போல இன்ஸ்டாகிராமிலும் புளூ டிக் சேவைக்கு கட்டணம் செலுத்தும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புளூ டிக் வசதி
உலகளவில் உள்ள பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் முக்கியமான செயலிகள் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் ஆகும். இதில் வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிரம் செயலிகள் மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமானது. அந்த வகையில் மெட்டா நிறுவனம், இன்ஸ்டாகிராம் செயலியில் சில அம்சங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, டிவிட்டர் செயலியை போல இன்ஸ்டாகிராமிலும் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான புளூ டிக் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், டிவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை அதிகாரியாக பொறுப்பேற்ற எலோன் மஸ்க், அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான புளூ டிக்குகளுக்கு புதிய சந்தாவை அறிமுகம் செய்தார். இதை தொடர்ந்து மெட்டா நிறுவனமும், இன்ஸ்டாகிராம் செயலியில் புளூ டிக்குகளுக்கான கட்டணத்தில் மாற்றங்களை அறிவித்துள்ளது. அதாவது, இன்ஸ்டாகிராம் செயலியில் யார் வேண்டுமானாலும் கட்டணங்களை செலுத்தி இனி புளூ டிக் வசதியை பெற்றுக்கொள்ளலாம் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.