பஞ்சு போன்ற மென்மையான இட்லி வேண்டுமா? அப்போ இந்த தவறை செய்யாதீங்க
பஞ்சு போன்ற மென்மையான இட்லி வேண்டுமென்றால் நாம் சில விடயங்களை சற்று கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்று பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் இரவு நேரத்தில் உணவு என்றால் அது இட்லி தோசையாகத் தான் இருக்கின்றது.
இவ்வாறு நாம் அதிகமாக விரும்பி சாப்பிடும் இட்லி பஞ்சு போன்று மென்மையாக இருப்பதற்கு சில குறிப்புகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பூ போன்ற இட்லிக்கு என்ன செய்ய வேண்டும்?
இட்லிக்கு சரியான அரிசியை ஊற வைக்க வேண்டும். இன்று சந்தையில் பல வகையான அரிசிகள் உள்ள நிலையில், நடுத்தர தானிய அரிசியை பயன்படுத்த வேண்டும்.
அரிசி மற்றும் உளுந்து இவற்றினை சேர்த்து ஊற வைப்பதை தவிர்க்க வேண்டும். இரண்டையும் தனித்தனியாக ஊற வைத்து அரைக்கவும்.
அரைத்த மாவை புளிக்க வைப்பதை சரியாக செய்ய வேண்டும். குறைந்தது 4 மணி நேரமாவது புளிக்க வைக்கவும். மாவு சிறிது நேரம் புளிக்க வைத்தால் இட்லி பஞ்சு போன்று வருமாம்.
அதே போன்று புளித்த மாவை நன்றாக அடித்து கலக்குவதை தவிர்க்கவும். மெதுவாக கிளறிவிட்டு இட்லி ஊற்ற ஆரம்பிக்கவும்.
இட்லி தட்டில் இருக்கும் குழியில் மாவு நிரம்பி வழியாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். அதாவது முக்கால் பங்கு இருக்குமாறு ஊற்றவும்.
இட்லி ஊற்றுவதற்கு முன் அச்சில் சிறிது எண்ணெய் தடவுவது இட்லியை நன்கு வேகவைப்பதுடன் மென்மையானதாகவும் மாற்றும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |