புற்றுநோயை தடுக்கும் கோவைக்காய் வறுவல்: இப்படியொரு முறை செய்து பாருங்க
பொதுவாகவே காய்கறிகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் கோவைக்காயில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் சத்துக்கள் மற்றும் பீடா கரோடின் ஆகியவை புற்றுநோய் உண்டாகுவதை தடுக்கும்.
கோவைக்காயில் உள்ள பொட்டாசியம் சத்து இதய செயல்பாடுகளை ஊக்குவிப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது.மேலும் பல நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு தேவையான மருந்து கோவைக் இருந்து தயாரிக்கப்படுகிறது.
காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு இதிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகின்றது. இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட கோவைக்காயை வைத்து அசத்தல் சுவையில் கோவைக்காய் வறுவலை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோவைக்காய் - 1/4 கிலோ (நறுக்கியது)
தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
சோம்பு - 1/2 தே.கரண்டி
வெங்காயம் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 1 தே.கரண்டி
சீரகம் - 1தே.கரண்டி
மிளகு - 1 தே.கரண்டி
வெந்தயம் - சிறிதளவு
வரமிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 2 தே.கரண்டி
கடலைப் பருப்பு - 1 தே.கரண்டி
பெருங்காயத் தூள் - சிறிது
பொட்டுக்கடலை - 1/4 தே.கரண்டி
மல்லி - 1 1/2 தே.கரண்டி
தேங்காய் - 2 கைப்பிடி (பொடியாக நறுக்கியது)
செய்முறை
முதலில் கோவைக்காயை சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு, வெந்தயம், வரமிளகாய், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயத் தூள், பொட்டுக்கடலை, மல்லி ஆகியவற்றை போட்டு நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு அதனுடன் தேங்காயை சேர்த்து ஈரப்பதம் போகம் வரையில் நன்றாக வதக்கி இறக்கி குளிர விட்டு, அதனை மிக்சர் ஜாரில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளித்து, அதனுடன் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக கோவைக்காயை அதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிவிட்டு மூடி வைத்து 5 நிமிடங்கள் வரையில் நன்றாக வேகவிட வேண்டும்.
கோவைக்காய் நன்றாக வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து ஒர் இரு நிமிடங்களுக்கு நன்றாக கிளறி இறக்கினால், அட்டகாசமான சுவையான ஆரோக்கியம் நிறைந்த கோவைக்காய் தேங்காய் வறுவல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |