காரசாரமான மீன் மிளகு மசாலா வீடே மணக்கும் சுவையில் செய்வது எப்படி?
காரசாரமான மீன் மிளகு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தயிர், சாம்பார் சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த ரெசிபி.
தேவையான பொருட்கள்
- துண்டு மீன் – அரை கிலோ
- வெங்காயம் – 200 கிராம்
- பச்சை மிளகாய் – நான்கு இஞ்சி
- பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
- சீரகம் – ஒரு டீஸ்பூன்
- மிளகு தூள் – நான்கு டீஸ்பூன்
- காய்ந்த மிளகாய் – ஐந்து
- கொத்தமல்லி இலை – ஒரு கப்
- மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
- உப்பு – தேவைகேற்ப
- எண்ணெய் – தேவைகேற்ப
- கறிவேபில்லை – சிறிதளவு

செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேபில்லை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.

பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டி விழுது, மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும். அடுத்து அதில் மீன் சேர்த்து, உடையாமல் வேகும் வரை அவ்வப்போது கிளறி, புரட்டி விடவும்.
மீன் வெந்ததும், மிளகுதுளை சேர்த்து கிளறவும். நறுக்கிய கொத்தமல்லி இலையை மீனை இறக்குவதற்கு முன் சேர்த்து கிளறி இறக்கவும். இப்போது சூப்பரான மீன் மிளகு மசாலா ரெடி.