அதிக வெளிச்சத்தினால் பலரும் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவது ஏன் தெரியுமா?
பலரும் சந்திக்கும் ஒரு மிக முக்கிய பிரச்சினையாக இருப்பது தூக்கமின்மை. தினமும் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை உறங்குவது தான் நல்ல உறக்கம். தூக்கமின்மை பிரச்சனைக்கு ஆயிரம் காரணங்கள் நம்மை சுற்றி இருந்தாலும், இந்த நவீன யுகத்தில் முதல் காரணம், விஞ்ஞான வளர்ச்சி என்று தான் கூற வேண்டும்.
ஆளாளுக்கு, ஒரு மொபைல் போனை கையில் வைத்துக் கொண்டு நோண்டிக் கொண்டே இருந்தால் எப்படிங்க தூக்கம் வரும்? ஒரு சிலருக்கு சிறிய வெளிச்சம் இருந்தாலும் தூக்கமே வராது. மேலும், இதற்கு அறிவியல் ரீதியாக காரணம் உண்டு. இருட்டான அமைதியான சூழ்நிலை இருந்தாலே, பகலிலும் நமக்கு தூக்கம் எளிதாக வந்து விடுகிறது.
ஆனால், இருட்டிற்கும், தூக்கத்திற்கும் என்ன தான் சம்மந்தம்? என்பதை தெரிந்துக் கொள்வோம்.. தூக்கம் வராமல் இருப்பதற்கு இருக்கும் காரணங்களில் பெரும்பாலும் வெளிச்சத்தை நீங்கள் நேரடியாக பார்க்கக்கூடிய தொலைக்காட்சி மற்றும் கணினி, செல்போன் போன்றவைகள் அதிக நேரம் பயன்படுத்துவது தான்.
மேலும், ஒருவருக்கு உளவியல் ரீதியாக பிரச்சனைகளும், கவலைகளும் இருந்தால் நிச்சயம் தூக்கம் வருவது தடைப்படும். அதற்கு பதிலாக உங்களுடைய உடல் நிலை தான் மோசமாகிக் கொண்டே இருக்கும். இரவு நேரத்தில் நீங்கள் தூங்கும் அந்த அறையில் சிறிது வெளிச்சம் இருந்தால் கூட ஆழ்ந்த உறக்கம் என்பது எப்பொழுதும் வராது. உடலில் இருக்கும் மெலடோனின் என்னும் ஹார்மோன் தான் தூக்கத்தை வரவழைக்கிறது.
வெளிச்சமாக இருக்கும் சமயத்தில் இந்த ஹார்மோன் குறைவாகவே சுரக்கிறது. இதனால் தூக்கம் வருவது தடைபடுகிறது. எனவே, முழுவதும் இருட்டாக இருக்கும் பொழுது மெலட்டோனின் அதிகமாக சுரந்து இயல்பாகவே உங்களுக்கு தூக்கத்தை வரவழைத்து விடுகிறது. இதனால் தான் வெளிச்சமாக இருக்கும் சமயத்தில் நம்மால் தூங்க முடிவதில்லை.
அப்படியும் சிலர் தூங்கினால் அதற்கு அவர்கள் உடலில் இருக்கும் சோர்வு தான் காரணமாக அமையும். அதுவும் ஆழ்ந்த உறக்கமாக இருப்பதில்லை. எனவே, உங்கள் அறையில் வெளிச்சம் குறைவாக வைத்துக் கொண்டு தூங்கி பாருங்கள், நிச்சயமாக தூக்கம் வரும். இதை விட ஒரு சிறந்த வழி இருக்கிறது. தூக்கமின்மையால் ஏற்படும் நோய்கள்:
இதயநோய்
உயர் ரத்த அழுத்தம்
ஆஸ்துமா
உடற்பருமன்
செரிமானக் குறைபாடு
கல்லீரல் பாதிப்பு
சிறுநீரகப் பிரச்சனை
புரோஸ்டேட் வீக்கம்
புற்றுநோய்
ஒவ்வாமை
மூளை சார்ந்த நரம்பு பிரச்சனை மூக்கடைப்பு
தூக்கத்தில் சுவாசத் தடை
தசைநார் வலி ஆகியவை இந்த தூக்கமின்மைநோயில் முக்கிய இடம் பெறுகின்றன....