முன்னோர்கள் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்ததற்கு இந்த தானியமும் காரணம்!
நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகிப்பது உணவுகளே. நாம் இப்போது நமது உடலுக்கு சரியான உணவுகளை எடுத்துக் கொள்கிறோமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லாம்.
ஆனால் நம் முன்னோர்கள் அவ்வாறு இல்லை. ஆரோக்கியத்திற்கு மாத்திரம் மட்டுமே நல்ல இயற்கை உணவுகளை எடுத்துக்கொண்டார்கள்.
நாம் இன்று அரிசி உணவை உட்கொண்டு வருகின்றோம். ஆனால் நம் முன்னோர்கள் சோள தானியத்தைதான் உணவாக உட்கொண்டார்கள். இந்த உணவு அவர்களின் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு பெரிதம் உதவியது.
சோளம்
சோளத்தை நீங்கள் பச்சையாகவும் அல்லது வேகவைத்தும் கூட சாப்பிடலாம்.
இது சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் நமக்கு கிடைக்கிறது. சோளத்தில் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பருவகால விருந்தாக உள்ளது.
இது தசைகளை உருவாக்குவதற்கும் உடலில் உள்ள செல்களை மீண்டும் உருவாக்குவதற்கும் உதவியாக இருக்கிறது.
சோளத்தில் கால்சியம், தாமிரம், துத்தநாகம், இரும்பு மற்றும் விட்டமின்கள் பி1, பி2, பி5 மற்றும் பி6 ஆகியவற்றுடன் தேவையான விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஒக்ஸிஜனேற்றங்களில் நிறைந்துள்ளது.
இவற்றினால் எமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. சோளத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது குடலை வலுப்படுத்தவும், உடலில் செரிமானத்தை சீராகவும் உதவுகிறது. உடல் பருமனை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
சோளம் உண்பதால் உண்டாகும் நன்மைகள்
சோளம் இன்சுலின் அளவை ஒழுங்குபடுத்துகிறது.
இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. சோளம் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கிறது.
இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான சிற்றுண்டியாக கருதப்படுகிறது.
நாள்பட்ட நோய்கள் பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாக்க உங்கள் அன்றாட உணவில் சோளத்தை சேர்த்துக்கொள்ளுங்கள்.
செலியாக் நோய் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான உணவாக இருக்கும்.
எடை இழப்பிற்கும் உகந்த உணவு சோளம் ஆகும். விரைவாக கூடுதல் கிலோவை குறைக்கலாம்.