இந்த திகதிகளில் பிறந்தவர்கள் ஆபத்தான சுயநலவாதிகளாம்... இவர்களிடம் ஜாக்கிரதை!
தொன்று தொட்டு புலக்கத்தில் இருக்கும் ஒரு பழங்கால சாஸ்திர முறைகளுள் ஒன்று தான் எண்கணித சாஸ்திரம்.
நமது வாழ்வில் அனைத்து விடயங்களிலும் எண்கள் தொடர்புப்படுகின்றன. எண்களால் வாழ வைக்கவும் முடியும்.அது போல் வீழ்த்தவும் முடியும் என எண்கணித சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

அதன் பிரகாரம் ஒருவர் பெயருக்கும், பிறந்த திகதி, மாதம், வருடம், பெயர் அனைத்தின் கூட்டுத்தொகையாக வரும் எண்ணுக்கும் அவர்களின் எதிர்கால வாழ்விற்கும் இடையில் உள்ள தொடர்பை கணித்து கூறுவதாகும்.
அந்த வகையில் குறிபிட்ட சில எண்களில் பிறந்தவர்கள் மிகவும் அதிகமாக சுயநல குணம் கொண்டவர்களாக இருப்பார்களாம். அப்படிப்பட்ட எண்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எண் 1

ஒவ்வொரு மாதத்திலும் 1,10,19,28 ஆகிய திகதிகளிவ் பிறந்தவர்களின் மூல எண் 1 ஆகும். இந்த எண்ணை கொண்டவர்கள் அனைத்து கிரகங்களுக்கும் அதிபதியாக திகழும் சூரிய பகவானனின் ஆதிக்கத்தில் பிறப்பெடுத்தவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இருக்கும் இடத்தில் தாங்கள் தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருப்பார்கள்.
தங்களின் நிலையை தக்கவைத்துக்கொள்ளவும், இலக்கை அடையவும் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருப்பார்கள். இவர்களின் சுயநலம் மிகவும் ஆபத்தானதாக இருக்கும்.
எண் 4

ஒவ்வொரு மாதத்திலும் 4,13,22 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் எண் நான்கின் கீழ் வருகிறார்கள். இந்த திகதிகளில் பிறந்தவர்கள் ராகுவின் தாக்கம் கொண்டவர்களாக அறியப்படுகின்றார்கள்.
இவர்கள் நினைத்ததை அடைய எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர்களாகவும், மற்றவர்களை முடிந்தவரை தங்களின் தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளும் குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இந்த எண்காரர்கள் எப்போதும் தங்கள் நலனை பற்றி மட்டுமே சிந்திப்பார்கள். இவர்களுக்கு சுயநலம் மிகவும் அதிகமாக இருக்கும்.
எண் 7

அனைத்து மாதத்திலும் 7,16,25 ஆகிய திகதிகளில் பிறந்தவர்கள் எண் 7ன் கீழ் வருகிறார்கள். ஏழு என்ற எண் கேது கிரகத்துடன் தொடர்புடையதாக இருப்பதால் இவர்கள் இரட்டை இயல்புககு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தங்களின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடிந்தவரை மற்றவர்களுக்கு பிடித்தமாதிரி நடந்துக்கொள்வார்கள்.
இவர்கள் மனதில் ஒன்று வைத்துக் கொண்டு, வெளியே வேறு விஷயம் பேசும் குணம் கொண்டவர்களாகவும் தங்களின் தேவைக்காக யாரையும் பயன்படுத்திக்கொள்ள தயங்காதவர்களாகவும் இருப்பார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |