சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: மே 8 முதல் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்!
ஜோதிட ரீதியில் கிரகங்களின் பெயர்ச்சியானது ராசிபலன் கணிப்பில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றது. காரணம் நவகிரகங்களின் நிலையில் ஏற்ப்படும் மாற்றமானது அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாகவே ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில், அசுரர்களின் குருவாக கருதப்படும் ஆடம்பரத்தின் கிரகமான சுக்கிரன் தற்போது ச தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் நுழைந்து, மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்கியுள்ளார். அதே வேளையில் ரோகிணி நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் சுக்கிரன் மே 08 ஆம் தேதி சுக்கிரன் மிருகசீரிடம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். சுக்கிரன் செவ்வாயின் நட்சத்திரத்தில் நுழைவது குறிப்பிட்ட சில ராசிகளுக்க செல்வ செழிப்பை அள்ளி்க்கொடுக்கப்போகின்றது.
அப்படி சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் கொடிகட்டி பறக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களின் தொழில் நிலையில் அபரிமிதமான முன்னேற்றம் உண்டாகப்போகின்றது.
குறிப்பாக வேலை தேடுபவர்களுக்கு மனதுக்கு பிடித்த வேலை அமையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் நிலை உருவாகும்.
நீண்ட கால கடின உழைப்புக்கான பலன்கள் இந்த காலகட்டத்தில் நிச்சயம் கிடைக்கும். இவர்களின் கடன் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டும் அளவுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
கன்னி

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்வி்ல் பல வழிகளிலும் அதிர்ஷ்ட பலடின்கள் கிடைக்கும்.
சுக்கிரனின் முழுமையான ஆசீர்வாதத்தால் இந்த ராசியினருக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும். குறைந்த முயற்ச்சியிலேயே பெரியளவில் வெற்றியடைவார்கள்.
நிதி நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு அசர வளர்ச்சி ஏற்படும். பொன் பொருள் குவியும். புதிய வழிகளில் வருமானம் பெறுவதற்கான வாய்ப்புகள் தானாகவே உருவாகும்.
விருச்சிகம்

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களின் தொழில் மற்றும் வியாபாராத்தில் அமோக முன்னேற்றம் உண்டாகும்.
நீண்ட கால வழக்குகள் முடிவுக்கு வரும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வருவதற்கான யோகம் உண்டு. வெளிநாட்டு நண்பர்கள் அல்லது உறவினர்களி்டமிருந்து பெரிய தொகை பணம் கைக்கு வரும்.
தம்பதிகளிடையே அன்பும், பிணைப்பும் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்துவந்த மன கசப்புகள் நீங்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |