ஆரம்பமாகப்போகும் கேது பெயர்ச்சி - அதிர்ஷ்ட கட்டையில் ஏறப்போகும் ராசிகள்
கேது பகவான் மக நட்சத்திரத்தின் மூன்றாம் நிலையில் பெயர்ச்சி அடைகிறார். இதனால் குறிப்பிட்ட ராசிகள் பயன் பெற போகின்றனர்.

கேது பெயர்ச்சி
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசியை கொள்ளும். கிரகங்களில் மிகவும் முக்கியமாக இருப்பது ராகு,கேது.
ராகு கேதுவின் பெயர்ச்சி ஒவ்வொரு ராசிக்கும் மிகவும் முக்கியம் வாய்ந்தது ஆகும். எனவே இவர்களின் பெயர்ச்சி குறிப்பிட்ட ராசிகளின் வாழ்க்கையை மாற்ற கூடியது.
கேது பகவான் சிம்ம ராசியில் இருக்கிறர். சிம்ம ராசியின் மகம் நட்சத்திரத்தில் இருக்கிறார். இந்த நிலையில், கேது பகவான் மக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் மே 29ஆம் தேதி காலை 10.16 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
ஜூன் 30ஆம் தேதி வரை மக நட்சத்திரத்தின் மூன்றாம் பாதத்தில் நிலைத்திருக்கும். இந்த பெயர்ச்சி தற்போது பல ராசிகளுக்கு நன்மைகளை கொடுக்கும்.

ரிஷபம்
- கேது பகவான் மக நட்சத்திரத்தின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை தரும். புதிய வேலை வாய்ப்புகள்கிடைக்கும். மாணவர்களுக்கு .து சுப யோகமாக அமையும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். வறுமை நீங்கும். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நிதியில் பலத்த உயர்வு கிடைக்கும்.
கன்னி
- கேதுவின் பெயர்ச்சியால் கன்னி ராசிக்காரர்களுக்கு நன்மை கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். புதிய தொழில் தொடங்க அதிக வாய்ப்புள்ளது. தொழிலில் பெரிய வெற்றி ஒன்று காத்திருக்கிறது. நீங்கள் நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சகோதர பாசம் கிடைக்கும். கடன் நீங்கும். திட்டமிட்ட பணிகளை முடிப்பீர்கள். புதிய பொறுப்புகள் வரும். வருமானமும் உயரக் கூடும்.
தனுசு
- கேதுவின் பெயர்ச்சியால் தனுசு ராசிக்காரர்களுக்கு லாபத்திற்கான வழிகள் பிறக்கும். பல பகாலம் தங்கிய பணிகள் முடிவடையும். அதிர்ஷ்டம், செல்வம் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வருமானமும் உயரக் கூடும். பழைய முதலீடுகளில் இருந்து அதிகமான லாபத்தை பார்ப்பீர்கள். பணம் சம்பாதிக்க பல வழிகள் கிடைக்கும்.
மகரம்
- மகர ராசிக்காரர்களுக்கு கேதுவின் பெயர்ச்சியால் வெற்றி, அதிர்ஷ்டம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க அதிக வாய்ப்புள்ளது. கூட்டுத் தொழிலில் இருந்து வந்த பிரச்னைகள் தீரும். புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வருமானம் உயரக் கூடும். புதிய வாகனம், சொத்து, வீடு வாங்கும் யோகம் உங்களுக்கு இருக்கிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).