நீங்க பீர்க்கங்காய் சாப்பிடுவீங்களா....அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்.
ஒவ்வொரு காய்கறிக்குள்ளும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அந்த வகையில் நாம் பெரிதாக உணவில் சேர்த்துக்கொள்ளாத பீர்க்கங்காயில் பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன.
இது ஆரோக்கியத்தில் அதிகமான தாக்கத்தை செலுத்துகின்றது.
இனி பீர்க்கங்காயில் உள்ள நன்மைகள் குறித்து பார்ப்போம்...
image - Lekhafoods
ஜீரணத்தை மேம்படுத்துகிறது
இந்தக் காய் இயற்கை மலமிளக்கியாகக் காணப்படுகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது.
அதுமட்டுமில்லாமல் குடல் பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது.
ரத்த சர்க்கரையின் அளவை சீராக்குகிறது
இதில் உள்ள நார்ச்சத்து ரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சுவதை மெதுவாக்கவும் திடீரென ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவை தடுக்கவும் உதவுகிறது.
image - Healthday
சருமத்தை பாதுகாக்கிறது
இதில் சருமம், கூந்தல், நம் போன்றவற்றை பராமரிக்க மினரலான சிலிக்கா உள்ளது. எனவே இதனை தொடர்ந்து டயட்டில் சேர்ப்பது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. வயதாகும் அறிகுறிகளை தடுக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது
இதில் இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை உள்ளடங்கியுள்ளன. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க உதவுகிறது.