Pebble Stone Walking: கூழாங்கலில் நடைபயிற்சியா?... எண்ணற்ற அதிசயத்தை உணர்வீங்க
கூழாங்கல் மீது நடைபயிற்சி செய்வது சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான விஷயங்களாக இருக்கும் நிலையில், அதன் நன்மை குறித்து தெரிந்து கொள்வோம்.
நடைபயிற்சி
நடைபயிற்சி உடலுக்கு பல்வேறு நன்மைகளை செய்யும் நிலையில், இதில் பல வகைகள் உள்ளது. ரேஸ் வாக்கிங், ரெட்ரோ வாக்கிங் என்ற வரிசையில் பெப்பிள் வாக்கிங் என்ற கூழாங்கள் வாக்கிங் ட்ரெண்டாகி வருகின்றது.
சித்த மருத்துவத்தில் இதனை வர்ம நடைபாதை என குறிப்பிடுகிறார்கள். சித்த மருத்துவத்தில் உள்ள உட்பிரிவில் வர்மமும் ஒன்று. அதில் தான் ‘வர்ம நடைபாதை’ வருகிறது.
உடலில் உள்ள வர்மம் என்ற ஆற்றல் புள்ளிகளை செயல்படுத்த வர்மநடைபாதை உதவுகிறது.
உள்ளங்காலில் காணப்படும் வர்மப் புள்ளிகள் கூழாங்கற்கள் மீது நடக்கும்போது தூண்டப்படுகின்றன.
நன்மைகள் என்ன?
சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகிறது.
முதியவர்கள் கூழாங்கற்களில் நடைபயிற்சி மேற்கொண்டால் ரத்த அழுத்தம் கூட குறையுமாம்.
தினமும் 8 வடிவத்தில் நடப்பதால் எடையும் கட்டுக்குள் இருப்பதுடன், வீட்டிலேயே இதை அமைத்துக் கொண்டால் நேரம் கிடைக்கும் நடைபயிற்சியை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.
குடல் இயக்கத்தை மேம்படுத்தி செரிமானத்தை தூண்டுவதுடன், வாத நோய்களையும் தடுக்கின்றது.
எப்படி அமைக்க வேண்டும்?
உங்கள் வீட்டில் 8 முதல் 10 அடி நீளத்தில் ஒரு இடத்தை தேர்வு செய்யுங்கள். வடக்கு, தெற்கு பார்த்தபடி 8 வடிவத்தில் பாதை அமைக்கவேண்டும்.
அகலம் 6 அடியாக இருந்தால் நல்லது. இந்த பாதையில் கூழாங்கற்கள் போட்டு அதன் மீது மெல்ல நடக்கத் தொடங்கலாம்.
காலில் புண்கள் ஏதேனும் இல்லாவிட்டால் காலணி அணியாமலேயே, 10 நிமிடம் வலது, 10 நிமிடம் இடது என மாறி மாறி நடக்க வேண்டும்.
வீட்டில் இல்லையெனில் ஆற்றங்கரையில் சென்று இந்த நடைபயிற்சியினை மேற்கொள்ளலாம்.
ஆனால் 8 வடிவ நடைபாதையினை 6 அடிக்கு குறைவாக அமைக்கக்கூடாது. அவ்வாறு அமைத்தால் தலைசுற்றல் பிரச்சனை ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |