நோய் எதிர்ப்பு சக்தியை மின்னல் வேகத்தில் அதிகரித்து உடல் எடை குறைக்கும் பீச் பழம்
பீச் பழங்களின் பூர்வீகம் சீனா என்றாலும் குளிர் காலத்தில் பெரும்பாலான நாடுகளில் பயிரிடப்படுகிறது.
இது கோடைக்கால பழங்களில் ஒன்று. பீச் பழங்களை ஸ்டோன் பழங்கள் என அழைக்கின்றனர்.
மேலும் பிளம்ஸ், செர்ரி பழங்கள், நெக்ட்ரைன் போன்றவையும் ஸ்டோன் ப்ரூட் பழங்களை சார்ந்தவையே.
பீச் பழத்தின் நன்மைகள்
பீச் பழத்தில் வைட்டமின் ஏ, சி அதிகமுள்ளதால் இந்த பழத்தை வைத்து ஃபேசியல் செய்தால் சரும சுருக்கங்கள் நீங்குவதோடு சரும துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சுத்தமாகவும் முகம் பொலிவுடனும் இருக்கும்.
பீச்பழத்துடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து முகத்திற்கு போட்டால் முகத்தில் கலர் மாற்றங்கள் ஏற்படும் பொதுவாக பீச் பழங்கள் முடி உதிர்வதை கட்டுபடுத்தும்.
பீச் பழங்கள் தொற்று நோய்கள், இதயநோய்கள் ஆகியவற்றை குணபடுத்தி இரத்த ஒட்டத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்கிறது.
கீழ்வாதம், ரூமட்டிக் நோயால் அவதி படுகின்றவர்கள் பீச் பழத்தின் மூலம் தீர்வு காண முடியும். வலிப்போடு கூடிய இருமல் இருப்பவர்களுக்கு பீச்பழத்தில் தேநீர் தயாரித்து பயன்படுத்துகையில் அதிக செயல் திறன் மிக்கதாக உள்ளது.
பீச் பழங்கள் ஆற்றலை அதிகரிக்ககூடிய சிறந்த பழங்களில் ஒன்று. ஏனெனில் மூலதனமாக கார்போஹைட்ரேட் கொண்டிருக்கிறது. இதில் பொட்டாசியம், இரும்பு, ஃபுளோரைடு போன்ற சத்துகளை அதிகளவு கொண்டுள்ளது.
உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தரக்சுடியது.
பீச் பழத்தில் வைட்டமின் பி6 கொண்டிருப்பதால் கர்ப்பிணிகள் சாப்பிடவேண்டிய பழங்களில் ஒன்றாக உள்ளது. மனஅழுத்தம், மனநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை மீட்க பீச் பழங்கள் உதவுகின்றது.
பீச்பழங்களை உட்கொள்வதால் நரம்பு மண்டலம் மூலமாக நரம்பின் செல்களை பாதுகாக்கிறது மேலும் சீறு நீரகத்தில் உருவாகும் கல் மற்றும் கட்டிகளை பீச்பழம் சாப்பிடுவதால் தடுக்க முடியும் .
இப்பழத்தில் நீர்சத்து அதிகம் காணப்படுவதால் உணவு கட்டுபாட்டில் இருப்பவர்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் இது கொழுப்பை குறைக்கும் திறன் கொண்டது.
கோடையில் வெளியில் சென்று களைப்புடன் வந்தால் பீச்பழத்தினை சாப்பிடலாம். ஏனெனில் இதில் நீர்சத்து அதிகம் கொண்ட பீட்டா கரோட்டின் இருப்பதால் உடல் வறட்சியை போக்குகிறது.
இது மலமிளக்கியாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரகப்பையில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.
அழகை அதிகரிக்கும் பீச்
பீச் ஜூஸ்
தேவையான பொருட்கள்
- திராட்சை - ஒரு சிறிய கொத்து.
- பீச் - ஒன்று.
- பேரிக்காய் - ஒன்று.
செய்முறை
எல்லா பழங்களையும் நன்கு கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். பேரிக்காய் மற்றும் பீச் பழத்தில் இருந்து விதிகளை அகற்ற மறக்க வேண்டாம். எல்லா பழங்களையும் ஜூஸரில் போட்டு ஸ்மூத்தாக அரைத்துக் கொள்ளவும்.
குறிப்பு
தேவை என்றால் இந்த ஜூஸுடன் சிறிய துண்டு இஞ்சியை சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும், நன்மைகள் கிடைக்கின்றது என்று அளவு இல்லாமல் சாப்பிட கூடாது. அளவு என்பது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே அளவாக சாப்பிட்டு முழு பலன்களையும் பெற்று கொள்ளுங்கள்.