பிரபல நடிகருடன் ஒரே அறையில் இருந்த நடிகை! வீடியோ வைரலானதால் நடந்த சம்பவம்
தெலுங்கு நடிகரான நரேஷ் பாபுவை முன்னாள் மனைவி செருப்பால் அடிக்க வந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து நடிகை பவித்ரா லோகேஷ்க்கு படவாய்ப்புகள் பறிபோயுள்ளதாம்.
நடிகருடன் ஒரே அறையில்
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு, இவரது சகோதரரான நரேஷ் பாபு, மூன்று முறை திருமணம் செய்துள்ளார்.
முதல் இரண்டு மனைவிகளை விவாகரத்து செய்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது மனைவியையும் விவாகரத்து செய்வதற்கு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பிரபல கன்னட நடிகை பவித்ராவை 4வது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியது. நடிகை பவித்ரா லோகேஷும் ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார்.

பவித்ராவுடன் என்ன தொடர்பு?
நடிகர் நரேஷ் பாபுவின் மூன்றாவது மனைவி ரம்யா ரகுபதி, அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்ததோடு, தான் அவரை விட்டு பிரிய முடிவெடுத்ததற்கு காரணமே பவித்ரா லோகேஷ் என்றும் தனக்கும் ரமேஷ்கும் விவாகரத்து ஆகவில்லை என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், நரேஷும், பவித்ராவும், மைசூரில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் தங்கியிருப்பதாக அறிந்த ரம்யா, அந்த இடத்துக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது போலீசார் அங்கு வந்து ரம்யாவை சமாதானப்படுத்த முயற்சி செய்தனர். அதேபோல் ஒரே வீட்டில் தங்கி இருந்த நரேஷும், பவித்ராவும் வெளியே வந்தபோது செருப்பால் அடிக்க முயன்றார் ரம்யா.
இதையடுத்து போலீசார் நரேஷை பத்திரமாக அழைத்து சென்றனர். செருப்பால் அடிக்க வந்த ரம்யாவை பார்த்து நடிகர் நரேஷ் விசில் அடித்தபடி சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.
Me Abandoning all the Works and Going into Theatres ❤️#Naresh #Pavithra pic.twitter.com/4XxissiJLZ
— ?????????️ (@Wishnuvv) July 3, 2022
பவித்ரா சொல்வது என்ன?
இந்த நிலையில், ரம்யாவின் குற்ற சாட்டுகளை மறுத்த பவித்ரா, நான் நரேஷை 4வதாக திருமணம் செய்யவில்லை எனவும், 200 படங்களில் நடித்த நான், அவருடன் 4, 5 படங்களில் நடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து, கணவர் சுசீந்திர பிரசாத்தை நான் திருமணம் செய்யும் போது அவரிடம் பணம் எதுவும் இல்லை. வீடு, கார், இல்லை ஆனாலும் அவருடன் 11 வருடம் வாழ்ந்தேன் என தெரிவித்தார்.

பறிபோன வாய்ப்புகள்
இதற்கிடையே மைசூரு போலீசிடம் புகார் ஒன்றையும் பதிவு செய்துள்ளார் பவித்ரா, இந்த விவகாரம் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் நடிகை பவித்ரா லோகேஷ் நடிக்க இருந்த 2 தெலுங்கு திரைப்படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அதாவது தெலுங்கு பட உலகின் முன்னணி இளம் நடிகர்களின் படங்களில் அம்மா வேடத்திற்கு நடிகை பவித்ரா லோஷகேசை படக்குழுவினர் தேர்வு செய்திருந்ததாகவும், தற்போது அவரை அந்த படங்களில் இருந்து நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் ஒன்று சேரப்போகும் தனுஷ்- ஐஸ்வர்யா? சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் மகன்கள்