மீண்டும் ஒன்று சேரப்போகும் தனுஷ்- ஐஸ்வர்யா? சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் மகன்கள்
விவாகரத்து பெற்று பிரியப்போவதாக அறிவித்த தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர் மீண்டும் ஒன்றுசேரப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தயாரிப்பு பணிகளில் மும்முரம்
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார் தனுஷ்.
தற்போது திருச்சிற்றம்பலம், வாத்தி, நானே வருவேன் ஆகிய படங்களை நடித்து முடித்துள்ள தனுஷ், விரைவில் தயாரிப்பு பணிகளிலும் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிகிறது.
சிவகார்த்திகேயனின் எதிர் நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, காக்கா முட்டை, விசாரணை, நானும் ரௌடிதான், விஐபி 2, வடசென்னை, மாரி 2 ஆகிய படங்களை தனுஷ் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஒன்று சேரும் ஜோடி
இந்நிலையில் இவரும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் திடீரென பிரிவதாய் அறிவித்தது ஒட்டுமொத்த திரையுலகம் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
இருவரையும் சேர்த்து வைக்க பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடந்து வந்ததாக கூறப்பட்டது, இருவரிடம் இருந்து சூப்பரான பதிலே வரும் என ரசிகர்களும் காத்துக் கிடந்தனர்.
இந்த முயற்சி தற்போது வீணாகவில்லை, ஆம் இருவரும் நடந்ததை மறந்துவிட்டு குழந்தைகளுக்காக மீண்டும் ஒன்றுசேர உள்ளார்களாம்.
அதாவது தனுஷின் பிறந்தநாளன்று இருவரும் இணைந்து திருப்பதிக்கு செல்லவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடும் நயன்- விக்கி ஜோடி?