மறைந்த கணவரின் நண்பரை காதலித்த பவானி ரெட்டி! திருமணம் செய்து கொண்டாரா?
பிக்பாஸ் பவானி ரெட்டியின் இரண்டாவது காதல் குறித்து அவரது மூத்த சகோதரி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
சின்னத்திரையில் ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பறந்து வந்த நடிகைகளுள் ஒருவர் தான் பவானி ரெட்டி.
இவர் சின்னத்தம்பி, ரெட்டை வால் குருவி போன்ற பல சீரியலில் நடித்திருந்தாலும் இவருக்கு தனி புகழை தேடி கொடுத்தது சின்னத்தம்பி சீரியல் தான்.
இவருக்கு என்று சமூக வலைத்தளங்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஆந்திராவை சேர்ந்த இவர் ஒரு சில காரணங்களால் நடிப்புக்கு இடைவெளி விட்டு நீண்ட நாளுக்கு பிறகு மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இவருக்கு திருமணமாகி எட்டே மாதத்தில் அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டது யாவரும் அறிந்ததே.
ஆனால் இது தொடர்பாக எந்த வித தகவலையும் வெளியிடாத பவானி பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக தனது வாழ்க்கையில் நடந்தவற்றை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
இதையடுத்து இவரது மூத்த சகோதரி சிந்து என்பவர் பவானியின் இரண்டாவது திருமணம் குறித்து பரவி வருகின்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பவானி அவரது கணவர் மறைவுக்கு பிறகு சமீப காலமாக வேறு ஒருவரை விரும்பி வந்தார். அவளின் விருப்பப்படியே குடும்பத்தினரும் நல்ல வாழ்க்கையை அமைத்து தர விரும்பினார்கள்.
ஆனால் சில காரணங்களால் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் பிரிந்து விட்டனர். அவள் கடந்த 4 வருடங்களாக வாழ்க்கையை மிகவும் கண்ணியமாகவும் தைரியமாகவும் வாழ கற்றுகொண்டாள்.
அவளின் இந்த புதிய பயணத்தில் உங்கள் ஆதரவு இன்று போல் என்றும் அளிக்க வேண்டி கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.