கொரோனாவில் இருந்து மீண்ட பிறகு மருத்துவருடன் செம ஆட்டம் போட்ட நபர்! பல இதயங்களை நெகிழ செய்த அழகிய காட்சி
மருத்துவர் மற்றும் கொரோனா வைரஸை வென்ற ஒரு நோயாளியின் நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் ஒருவரின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதிலும் தற்போது கொரோனாவின் கொடிய இரண்டாம் அலை நாடு முழுவதையும் தாக்கி வரும் இதுபோன்ற மோசமான காலத்தில், மருத்துவமனை படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் உரிய மருந்துகளைப் பெறுவதில் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
Kumar was critical when we received a request to help him find a bed. 7 days later he sent us his victory dance against Covid just before getting discharged from the Hospital. #ERTStories #Bengaluru pic.twitter.com/pPU5Hg5OjW
— ERT Bangalore (@ErtBangalore) May 25, 2021
இதனை பார்க்கும்போது இருள் மற்றும் உதவியற்ற தன்மை எல்லா இடங்களிலும் உள்ளது என்பது தெளிவாகிறது.
இந்த நிலையில் சமீபத்தில், ஒரு மருத்துவர் மற்றும் கொரோனா வைரஸை வென்ற ஒரு நோயாளியின் நடன வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஈஆர்டி பெங்களூரு பகிர்ந்த அந்த சந்தோஷமான வீடியோ கிளிப்பில், பிபிஇ கிட்டில் அணிந்திருக்கும் மருத்துவர் பெங்களூரைச் சேர்ந்த மருத்துவமனையின் பொது வார்டில் ஒரு நோயாளியுடன் நடனமாடுவதைக் காணலாம்.
அவர்கள் இருவரும் பாலிவுட் டிராக்கின் இசைக்கு ஏற்றாற்போல அசைவுகள் செய்வதைக் காணலாம்.