பசங்க பட மனோன்மணியை ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க
பசங்க திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமான மனோன்மணி கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகை தாரணியின் தற்போதைய புகைப்படம் வெளியாகி இணைத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
பசங்க திரைப்படம்
நடிகர் சசிகுமாரின் தயாரிப்பில் உருவான படம் தான் பசங்க. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் அவருக்கு முதல் படம்.
இத்திரைப்படத்தில் விமல், வேகா மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் சிறுவர்கள் பலர் நடித்துள்ளார்.
பாண்டிராஜின் பசங்க படம் தமிழ் சினிமா ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஒன்று. அந்த படத்தில் அன்புக்கரசு என்ற ரோலில் நடித்ததற்காக குழந்தை நட்சத்திரம் கிஷோருக்கு தேசிய விருதும் கிடைத்தது.
மேலும் சிறந்த தமிழ் படத்திற்கான விருதும், சிறந்த திரைக்கதைக்கான விருதும் பசங்க படத்திற்காக கிடைத்தது.
இந்த படத்தில் 4 சிறுவர்கள் அவர்களின் வாழ்வியல், நண்பர்கள், கல்வி , யதார்த்தமான பள்ளி செல்லும் பருவத்தை தனது சிறப்பான இயக்கத்தில் மக்கள் மனதில் அழகாக பதியச்செய்திருப்பார்.
இந்த படத்தின் மூலம் தான் நடிகர் விமலும் திரையுலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் மனோன்மணி கதாபாத்திரத்தில் நடித்த தாரிணி கொம்பன் படத்தில் லக்ஷ்மி மேனனுடன் நடித்திருப்பார்.
இவரின் தற்போதைய புகைப்படம் சமூக வளைத்தளத்தில் வெளியாகி இணைத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.