வெளிநாட்டில் படித்த பார்த்திபன் மகளா இது? தந்தையுடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்
நடிகர் பார்த்திபனின் மகள் வெளிநாட்டில் படித்து வந்தாலும், தமிழ் பண்பாட்டை மறக்காமல் புடவை அணிந்து தந்தையுடன் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகர் பார்த்திபன்
தமிழ் திரையுலகில் தற்போதும் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் நடிகர் தான் பார்த்திபன். இவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் மகி்ழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளார்.
நடிகர் மட்டுமின்றி இயக்குனராகவும் வலம் வரும் இவர், இயக்குனர் பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இவர் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்தார்.
ஆனால் இந்த தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். சமீபத்தில் பார்த்திபன் நடித்த மேன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
பிள்ளைகள் குறித்து பார்த்திபன்
சமீபத்தில் நடிகர் பார்த்திபன் கொடுத்த பேட்டியில், எனக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். தனது மகன் இயக்குனராக பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், தனது மகள் மருமகனும் இயக்குனர் ஆகவே ஆசைப்படுகின்றனர்.
அதற்கான முயற்சியையும் எடுத்து வரும் நிலையில், எனது மகள் கீர்த்தனா முதல் பொக்கிஷம் என்றும் அவருக்கு இசை மீது அதிக ஆர்வம் உண்டு.
இதுநாள் வரை என் வாழ்க்கையில் மீண்டும் சினிமாவில் நுழைவதற்கு தனது மகள் கீர்த்தனா மட்டுமே முழுக்க முழுக்க காரணம் என்றும், தனது மூத்த மகள் உயிர் என்றும் கீர்த்தனா எனது அறிவு என்றும், மகன் அன்பு என்றும் தெரிவித்ததோடு, பிள்ளைகளை இவ்வாறு தான் பிரித்து வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
நடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனா வெளிநாடு சென்று படித்து வந்தாலும் தமிழ் கலாச்சாரம் மாறாமல் புடவையில் தனது தந்தையுடன் காணப்படும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |