பாபநாசம் படத்தில் நடித்த சின்ன பெண்ணா இப்படி?.. புகைப்படத்தை பார்த்து வாயடைத்துபோன ரசிகர்கள்
தமிழில் பாபநாசம் என்ற பெயரில் மலையாள படம் ரீமேக்கானது. அதில் கமல்ஹாசன் மற்றும் கவுதமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும், அவர்களுக்கு மகள்களாக நிவேதா தாமஸ், எஸ்தர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூல் சாதனையும் படைத்தது.
மேலும் சமீபத்தில் கூட த்ரிஷ்யம் 2 அமேசான் பிரைம் ஓடிடி யில் வெளியாகி ஹிட்டானது. இந்நிலையில் பாபநாசம் படத்தில் கமலுக்கு இரண்டாவது பெண் பிள்ளையாக நடித்திருந்தவர் இளம் நடிகை எஸ்தர்.
அடிக்கடி சமூக வலைத்தளங்களில் ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வாயடைக்க செய்வார். அவர் ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு தற்போது நன்கு வளர்ந்து செம மாடர்னாக உள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.