நெஞ்செரிச்சலுக்கு மருந்தாகும் Pantoprazole மாத்திரைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
நெஞ்செரிச்சல், வயிற்றில் அதிகளவில் அமில சுரப்பு உட்பட வயிற்று புண்களுக்கு மருந்தாகிறது Pantoprazole.
வயிற்றில் உருவாகும் அமிலத்தின் அளவை குறைப்பதன் மூலம் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் நெஞ்செரிச்சலை சரிசெய்கிறது.
பக்கவிளைவுகள்
- வயிற்றுப்போக்கு
- தலைவலி
- குமட்டல்
- வாந்தி
- மயக்கம்
- அடிவயிற்றில் வலி
- மூட்டுகளில் வலி
- வயிறு உப்புசம்
எந்தவொரு மருந்தையும் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் சுயமாக எடுத்துக்கொள்ளுதல் கூடாது, இது தீவிரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.
Pantoprazole மாத்திரைகள் உணவு எடுத்துக்கொள்வதற்கு ஒருமணிநேரத்துக்கு முன்னதாக எடுத்துக்கொள்ளலாம், அல்லது காலை வேளையில் எடுத்துக்கொள்வது பலனை தரும்.
ஒருநாளைக்கு இரண்டுமுறை என்ற பட்சத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் எடுத்துக்கொள்ளலாம்.
Pantoprazole மாத்திரைகளை முழுமையாக உட்கொள்ளவும், மருந்தை பிரிக்கவோ, நசுக்கவோ அல்லது உடைக்கவோ வேண்டாம், மெல்லவும் கூடாது.
Pantoprazole மாத்திரைகள் உட்கொள்ளும் போது வயிற்றில் அமில சுரப்பை அதிகப்படுத்துவது போன்ற உணவுகளை சாப்பிடக்கூடாது, மது அருந்துவது, புகைப்பிடிப்பதல் கூடாது, தாமதமான இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்று வலி தொடர்ச்சியாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
14 நாட்களுக்கு தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொண்ட பின்னரும் நோய் குணமாகவில்லையென்றாலும் மருத்துவரை மீண்டும் சந்திக்க தவறவேண்டாம்.
நீண்டநாட்களுக்கு Pantoprazole மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் மெக்னீசியத்தின் அளவு குறைந்து எலும்புகளின் வலிமையை குறைக்கலாம், உடல் எடையையும் அதிகரித்து விடும், இதற்கு காரணம் வயிற்றில் அமில சுரப்பை கட்டுப்படுத்துவதே.