உலகின் மிகப் பெரிய தங்க புதையல் கண்டுபிடிப்பு- இந்தியாவுக்கு ஜாக்பாட்
பொதுவாகவே பூமியில் உள்ள கனியவளங்கள் எத்தணை நூற்றாண்டுகள் கடந்தாலும் அதன் மதிப்பு மாறாப்போவதில்லை.
நாளுக்கு நாள் தங்கம் போன்ற உலோகங்களின் பெறுமதி அதிகமாகிக் கொண்டு தான் போகும். தங்கம் மீதுள்ள நம்பிக்கை மற்றும் பளபளப்பு அதன் மதிப்பை அதிகப்படுத்துகிறது.
அதிலும் குறிப்பாக, இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் உள்ள மக்கள் தங்களின் சமூக கலாச்சாரத்தில் தங்கத்தை ஒரு அங்கமாக பார்க்கிறார்கள்.
உலகின் மிகப்பெரிய தங்கக் கையிருப்புகள், அதிகம் கவனம் பெறாத சில நாடுகளில் தங்கம் குவிந்து கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், பல பில்லியன் பெறுமதியிலான தங்கம் எந்தெந்த நாடுகளில் குவிந்து கிடக்கிறது என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
உலக தங்க இருப்பு
உலக தங்க கவுன்சில் (World Gold Council) வெளியிட்டுள்ள தகவல் அடிப்படையில், இதுவரையில் உலகளவில் உள்ள நாடுகளில் 2,44,000 மெட்ரிக் டன் தங்கம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதில், 1,87,000 மெட்ரிக் டன் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு தங்கம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மிகுதியான எஞ்சியிருக்கும் 57,000 மெட்ரிக் டன் தங்கம் இன்னும் பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கின்றன.

இந்த தங்க புதையலின் பெரும் பகுதி சீனா, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா போன்ற ஒரு சில நாடுகளில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
தங்க புதையல் உள்ள நாடுகள்
1. புதைந்து கிடக்கும் தங்க வளம் ஆஸ்திரேலியாவில் அதிகம் உள்ளது. ஆஸ்திரேலிய மண்ணுக்கு அடியில் சுமார் 12,000 மெட்ரிக் டன் தங்கம் புதைந்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமாராக 720 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (சுமார் ரூ.60 லட்சம் கோடி) என கணக்கிடப்பட்டுள்ளது.
2. இரண்டாவது இடத்தில் இருக்கும் ரஷ்யாவில் சுமார் 12,000 மெட்ரிக் டன் தங்கம் பூமிக்கு அடியில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

3. இந்தோனேசியாவில் 3,600 மெட்ரிக் டன் தங்க இருப்பதாகவும், ஆப்பிரிக்க நாடான தென் ஆப்பிரிக்கா, சுமார் 3,200 மெட்ரிக் டன் தங்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
4. தங்கம் மதிப்பு குறைந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் சுமார் 3,000 மெட்ரிக் டன் தங்கம் பூமியில் புதைந்து கிடப்பதாக கூறப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட 5 நாடுகளும் எதிர்காலத்தில் உலகப் பொருளாதாரத்தில் வலுப்பெற்ற நாடுகளாக இருக்கும் என கணிப்புக்கள் உறுதியாக கூறுகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |