மாலை தேநீருக்கு சூடான பன்னீர் - ஆலு ஸ்டஃப்டு போண்டா! எப்படி செய்றாங்க தெரியுமா?
பொதுவாக வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். சாப்பாட்டை விட இதை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதனால் பெற்றோர்கள் ஸ்நாக்ஸ் சாப்பாடாக செய்து கொடுப்பார். ஆனால் இது போன்ற ஸ்நாக்ஸ்கள் அதிகம் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிப்பு ஏற்படுமே தவிர உடலுக்கான ஊட்டசத்துக்கள் கிடைப்பது குறைவாக இருக்கும்.
அந்த வகையில் 15 நிமிடங்களில் செய்யக்கூடிய சுவையான பன்னீர் - ஆலு ஸ்டஃப்டு போண்டா எவ்வாறு செய்வது என்பது குறித்து தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை மாவு - 150 கிராம்
- அரிசி மாவு - 25 கிராம்
- மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
ஸ்டஃப்பிங் செய்ய தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்து மசிக்கவும்)
- பன்னீர் துண்டுகள் - 50 கிராம்
- தனியா தூள் - ஒரு டீஸ்பூன்
- கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்
- நறுக்கிய கொத்த மல்லித்தழை, பச்சை மிளகாய் - சிறிதளவு
- எலுமிச்சைச் சாறு - அரை டீஸ்பூன்
- மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - சிறிதளவு
தயாரிப்பு முறை
முதலில் ஸ்டஃப்பிங் தேவையான பொருட்களை நன்றாக கலந்து சிறிய உருண்டை போல் உருட்டிக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பொரிக்க தேவையான எண்ணெய் சேர்த்து கொதித்து வரும் போது அதனை பொரித்தெடுத்து எடுக்கவும்.
தற்போது நாம் ஆவலுடன் எதிர்பார்த்த சூப்பரான பன்னீர் - ஆலு ஸ்டஃப்டு போண்டா தயார்.