பாலைத் திரித்துத் தயாரிக்கப்படும் பனீர் ஆரோக்கியமானதா? தெரிஞ்சிக்கோங்க..
பொதுவாக வீடுகளில் அதிகமான அளவு பால் இருந்தால் அதனை பயன்படுத்தி சுவையான பனீர் தயாரிக்கலாம்.
இவ்வாறு தயாரிக்கும் பொழுது பாலிற்கு எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறோமோ அந்தளவு விரைவாக பனீர் தயாராகும்.
அந்த வகையில் வீடுகளில் இருக்கும் பசும்பால் அல்லது எருமைபாலை எடுத்து அதில் கொஞ்சமாக எலுமிச்சைப்பழச் சாறு சேர்த்து காய்ச்சி விட்டு இதன் பின்னர் வினாகிரி சேர்த்து வைத்தால் அது திரிபடைந்து சுவையான பனீரை உருவாக்கும்.
நாம் சாப்பாட்டிற்காக சேர்த்து கொள்ளும் பனீரில் புரதம் மற்றும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக இருக்கின்றது.
இது போன்று பனீரால் என்ன நன்மைகள் இருக்கின்றது என்பதனை தெளிவாக பார்க்கலாம்.
பனீர் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. சமையலுக்கு பயன்படுத்தும் பனீரில் கேசின் என்ற புரதம் அதிகமாகவுள்ளது. இது பற்கள், எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
2. பனீர் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் வைட்டமின் சத்துகளும் கிடைக்கின்றது.
3. அதிகமான எடையால் அவஸ்தைப்படுபவர்கள் இந்த உணவை தாராளமாக சாப்பிடலாம்.
4. பனீரை கொண்டு கிரேவி, புலாவ், டிக்கா, புர்ஜி என ஏகப்பட்ட வகைகளில் சாப்பாடு செய்யலாம். இதனால் குழந்தைகளுக்கு இது மிகவும் பிடித்தமான உணவாக பார்க்கப்படுகின்றது.
5. சரும பளபளப்பாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் பன்னீர் எடுத்து கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு
பால் தொடர்பான அலர்ஜி இருப்பவர்கள் பனீரை தவிர்ப்பது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |