மொறு மொறுப்பான பனீர் பிரெட் பஜ்ஜி செய்வது எப்படி தெரியுமா?
மாலை நேரம் வந்தாலே போதும் கையில் காபி அல்லது தேநீர் கோப்பையுடன் காரசாரமான நொறுக்குத்தீனி வேண்டுமென்ற விரும்புவோம்.
மாலை வேளையில் டீயுடன் சேர்த்து வெங்காய பஜ்ஜி, கத்திரிக்காய் பஜ்ஜி, வாழைக்காய் பஜ்ஜி, பிரெட் பஜ்ஜி, உருளைக்கிழக்கு பஜ்ஜி என பலவகையானவற்றை ருசி பார்த்திருப்போம்.
இன்று பனீர் பிரெட் பஜ்ஜி செய்வது எப்படி என அறிந்து கொள்ளலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
மாவு தயார் செய்ய
- கடலை மாவு - 1 1/2 கப்
- மஞ்சள் தூள் - 1/4
- தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
பிரெட் பனீர் பஜ்ஜி செய்ய
- பிரெட் - 8 துண்டுகள் (மைதாவிற்கு பதிலாக கோதுமை பிரெட் துண்டுகளையும் பயன்படுத்தலாம்)
- துருவிய பனீர் - 1 கப் வேகவைத்து
- மசித்த பட்டாணி - 1/4 கப் நறுக்கிய கொத்தமல்லி
- இலைகள் - 2 தேக்கரண்டி
- கருப்பு மிளகு - 1/2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- பக்கோடாவை
பொறித்து எடுக்க
தேவையான அளவு வெஜிடபுள் அல்லது சூரியகாந்தி எண்ணெய்
செய்முறை
ஒரு பாத்திரத்தில், பனீர், பட்டாணி, கேரட், கொத்தமல்லி, 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், கருப்பு மிளகு, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
ரொட்டிக்குள் பனீர் ஸ்டஃப்பிங்கை வைப்பது
முதலில் ஒரு ரொட்டி துண்டை எடுத்து அதில் தயார் செய்து வைத்துள்ள பனீர் ஸ்டஃப்பிங்கை சமமாக பரப்பவும். அதன் மீது மற்றொரு ரொட்டி துண்டை வைத்து கவர் செய்யவும். இப்போது பிரெட்டை ஸ்டஃப்பிங் உடன் சேர்ந்து சம அளவிலான இரண்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில், 11/4 கப் கடலை மாவு, 1 கப் தண்ணீர், 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், உப்பு மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். அந்த கலவையை கட்டிகள் இல்லாத மென்மையான மாவாக கரைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, அதில் ஸ்டஃப் செய்யப்பட்டு, கடலை மாவில் முக்கி எடுத்த பிரெட் துண்டுகளை அதில் போடவும்.மிதமான சூட்டில், பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.
பனீர் பிரெட் பஜ்ஜி தயார்
இதேபோல் மிதமான தீயில் வெட்டி வைக்கப்பட்டுள்ள அனைத்து பிரெட் துண்டுகளையும் சேர்த்து பொன்னிறத்தில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். இதனை புதினா அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாறவும்.