சத்துமிக்க பனீர் போண்டா... எளிமையான முறையில் செய்வது எப்படி?
பனீரில் அதிக சத்துக்கள் காணப்படுகின்றன. காரணம், அது நேரடியாக பாலில் இருந்து தயாரிக்கப்படுகின்றது.
இதில் பொட்டாசியம், செலினியம் போன்றவை காணப்படுகின்றன. இவை உடல் மற்றும் மன பலத்துக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கின்றது.
தேவையான பொருட்கள்
பனீர் - 300 கிராம்
வெங்காயம் - 1
அரிசி மா - 1/4 கப்
மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி
கடலை மா - 1 கப்
பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 1
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி - சிறிதளவு
புதினா - 2 மேசைக்கரண்டி
சீரகப் பொடி - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலாவதாக ஒரு பாத்திரத்தில் அரிசி மா, கடலை மா, உப்பு போன்றவற்றை சேர்த்து கொள்ளவும்.
பின்னர் பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அதன்பின்னர் அதனுடன் சீரகப் பொடி, மிளகாய் தூள், மிளகுத் தூள், மசாலா சேர்த்துக் கொள்ளவும்.
அதற்கடுத்ததாக பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா என்பவற்றுடன் தேவையான அளவு நீர் சேர்த்து போண்டா பதத்துக்கு பிசைந்து கொள்ளவும்.
அதன் பின்னர் அதில் பேக்கிங் சோடா, பனீர் துண்டுகள் என்பவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக போட்டு பொரித்தெடுக்கவும். இப்போது சுவையான பனீர் போண்டா தயார்.