முகச் சுருக்கத்தை போக்கும் பனீர் ஃபேஸ் பெக்...
பனீர் உணவுப் பொருளாக அனைவருக்கும் பிடிக்கும் என்று தெரியும். அதன் சுவை அனைவரையுமே கட்டிப்போட்டுவிடும்.
ஆனால், பனீர் ஒரு சிறந்த அழகுசாதனப் பொருள் என்று யாருக்காவது தெரியுமா?
ஆம், பனீர் முகச் சுருக்கத்தை நீக்கி, தோலை அழகுபடுத்துகிறது. சரி இனி பனீர் ஃபேஸ் பெக் எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்...
image - india.com
தேவையான பொருட்கள்
பனீர் - 50 கிராம்
எலுமிச்சை - 1 கரண்டி
தேன் - 1 கரண்டி
விட்டமின் ஈ மாத்திரை - 2
எவ்வாறு செய்யலாம்?
முதலாவதாக பனீரை நன்றாக மசித்துக்கொள்ளவும். பின்னர் அதனுடன் எலுமிச்சை சாற்றை கலந்துகொள்ளவும்.
பின்னர் அதில் தேன் சேர்த்து மைபோல கலந்துகொள்ளவும்.
அதன்பின்னர் பனீர் பேஸ்ட்டுடன் விட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
நாம் சேர்த்த அனைத்து பொருட்களும் ஒன்றாக சேரும் வரை அவற்றை மூடி 5 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
image - TV9 marathi
எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
முகத்தை கழுவி, ஈரம் இல்லாமல் துடைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இந்த ஃபேஸ் பெக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும்.
இறுதியாக 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும்.