சரும பொலிவை பெற வேண்டுமா?... புளி ஃபேஸ் பேக்!
எல்லோருக்குமே தாம் தக்காளிப் பழம் போல் சிவந்த நிறத்தில் அழகாக இருக்க வேண்டும் என்பதே ஆசை.
ஆனால், சில சந்தர்ப்பங்களில் வெயில், மாசு போன்றவற்றால் நமது சருமம் பொலிவிழந்து போய்விடும்.
இந்த பொலிவை மீண்டும் பெற அழகு நிலையங்களுக்குச் சென்று ப்ளீச்சிங் செய்து கொள்கிறோம். இனி வீட்டிலிருக்கும் பொருட்களைக் கொண்டே முகத்திலிருக்கும் கருமையைப் போக்கலாம்.
அந்த வகையில் சருமத்தின் பொலிவுக்கு மிகச் சிறந்த பொருளாக புளி காணப்படுகிறது.
சரி இனி புளியை வைத்து எவ்வாறு சருமத்திலுள்ள கருமையை போக்கலாம் எனப் பார்ப்போம்...
OPHGCG
தேவையான பொருட்கள்
புளி - எலுமிச்சையளவு
தேன் - 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
அரிசி மா - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
ரோஸ் வோட்டர் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எவ்வாறு செய்யலாம்?
புளியை சூடான நீரில் ஊறவைத்து, அதன் சாறை பிழிந்தெடுக்க வேண்டும்.
அந்த சாறில் அரிசி மாவு, எலுமிச்சம் பழச்சாறு, மஞ்சள் தூள், தேன் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
ரோஸ் வோட்டர் கொண்டு முகத்தை நன்றாக துடைத்துவிட்டு, இந்த புளிக் கலவையை முகத்தில் தடவவும்.
பின்னர் 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.
வாரத்தில் இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.