தொடைக்கு கீழ் தொங்கும் தொப்பையை குறைக்க தேன், பூண்டு வைத்தியம்! சூப்பரான ஹெல்த் டிப்ஸ்
பொதுவாக உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேன் சாப்பிடுவார்கள். அத்துடன் இதய ஆரோக்கியம் பாதுகாக்கும்.
இது மட்டுமல்ல சமையல் அறையில் இருக்கும் பூண்டையும் நாம் நோய்கள் குணமாக்கும் மருந்தாக எடுத்து கொள்ளலாம்.
அந்தவகையில பூண்டு, தேன் இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் காலப்போக்கில் ஏகப்பட்ட நோய்கள் குணமாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இவை இரண்டிற்கும் நாம் பெரிதாக எங்கும் அலைய வேண்டிய அவசியம் இல்லை. இதனால் நாம் தாராளமாக எடுத்து கொள்ளலாம்.
தேன், பூண்டு சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும்?
1. வெறும் வயிற்றில் பூண்டையும் தேனையும் சேர்த்து சாப்பிடும் போது அனைத்து பிரச்சனைகளும் சரியாகி விடும். மேலும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை உடலில் அதிகப்படுத்தும்.
2. பூண்டு மற்றும் தேன் பூஞ்சை தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் இவை இரண்டும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
3. எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் இவை இரண்டையும் காலையில் தினமும் சேர்த்து சாப்பிட வேண்டும். இதற்கு வேகமாக எடை குறையும்.
4. தேன் மற்றும் பூண்டில் உடலை சூடுபடுத்தும் கூறுகள். இதனால் உடல் வெப்பம் ஏற்படுவதுடன் சளி, காய்ச்சல் பிரச்சனையில் இருந்தும் நிவாரணம் கிடைக்கின்றது.
5. தொண்டை புண் அல்லது சைனஸ் பிரச்சனை இருந்தால் இதனை தினமும் காலையில் சாப்பிடலாம்.
6. இதய நோயாளிகள் தேன் மற்றும் பூண்டை சேர்த்து சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் அதிகரிக்கும்.