paneer egg idli :ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கும் பன்னீர் முட்டை இட்லி... எப்படி செய்வது?
பொதுவாக ஆண்களுக்கும் சரி , பெண்களுக்கும் சரி உடல் எடையை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும்.
ஆனால் எத்தனை பேர் அதனை ஆரோக்கியமான முறையில் செய்ய நினைக்கின்றார்கள் என்பது கேள்விக்குறியே.
ஜிம்மிற்கு செல்பவர்களாக இருந்தாலும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை தான் காலை வேளையில் சாப்பிட வேண்டும். அது எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
அப்படி ஆரோக்கியமான முறையில் உடல் எடையை விரைவில் குறைக்க உதவும் பன்னீர் முட்டை இட்லியை அசத்தல் சுவையில் எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முட்டை - 3
தேங்காய் துருவல் - 1 கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
பன்னீர் - 100 கிராம்
தண்ணீர் - சிறிதளவு
முந்திரி - தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதனுடன் துருவிய தேங்காய், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு மற்றும் பேக்கிங் சோடா ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்துவிட்டுக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் பன்னீரை கைகளால் உதிர்த்து சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, இட்லி மாவு பதத்திற்கு கலந்து தயார் செய்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து இட்லி பார்த்திரத்தை அடுப்பில் வைத்து, தண்ணீரை் ஊற்றி, சூடேற்றிய பின்னர் அதற்குள் இட்லி தட்டின் சில குழிகளில் ஒவ்வொரு முந்திரியையும் சில குழிகளில் பாதாமையும் வைத்து, பின் கலந்து வைத்துள்ள பன்னீர் முட்டை கலவையை ஊற்றிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு இட்லி தட்டை இட்லி பாத்திரத்தில் வைத்து, 15 நிமிடங்கள் வரையில் வேக வைத்து எடுத்தால், அவ்வளவு தான் அருமையான சுவையில் புரோட்டின் நிறைந்த பன்னீர் முட்டை இட்லி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |