பன்னீர் பட்டர் மசாலாவிற்கு இவ்வளவு ஜிஎஸ்டியா? ஒரே நாளில் இணையத்தில் ட்ரெண்டிங்.. நெட்டிசன்களின் கருத்து
இணையத்தில் சில நாட்களில் திடீரென ஏதாவது ஒரு விஷயத்தை நெட்டிசன்கள் ட்ரெண்டாக்கி வருவார்கள். அந்த வரிசையில் பன்னீர் பட்டர் மசாலா திடீர் என ட்ரெண்டாகி வருகிறது.
காரணம் அண்மைக் காலங்களாக பிராண்டிங் மற்றும் பேக்கிங் செய்யப்பட்ட தயிர், பால், பன்னீர், லஸ்ஸி, சீஸ், கோதுமை மாவு, அரிசி, வெள்ளம், தென், அப்பளம், மீன், இறைச்சி போன்ற பல உணவு பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி ரிவைஸ் செய்யப்பட்டுள்ளது.
அதேப்போல், பன்னீருக்கு 5 % ஜிஎஸ்டியும், வெண்ணெய்க்கு 12% ஜிஎஸ்டியும், மசாலா பொருட்களுக்கு 5 % ஜிஎஸ்டியும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அப்படியானால் மொத்தமாக பன்னீர் பட்டர் மசாலாவிற்கு 22 % ஜிஎஸ்டியா..? என நெட்டிசன்கள் கேள்வியை எழுப்பியுள்ளனர்.

பலரும் இது தொடர்பான தங்கள் கருத்துக்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் அப்படியானால் பன்னீர் பட்டர் மசாலா தோசைக்கு என்ன தான் ஜிஎஸ்டி
வரும்? என கணக்கு போட்டு பார்க்க சொல்லி இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். ஜிஎஸ்டி பற்றி அப்போ உங்க கருத்து என்ன?
