அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் தான் சான்ஸ்! ஓபன் டாக் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை
படவாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் கேட்டார்கள் என பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை கூறிய தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பிரித்த ஐசு
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இந்த தொடரில் நான்கு நாயகர்களும், நான்கு நாயகிகளும் நடித்து வருகிறார்கள். இதில் மட்டும் தான் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது.
இந்த நிலையில் குடும்பத்தை பிரித்து தன்னுடைய கணவரை தனியாக அழைத்து சென்று வாழ்ந்து வருபவர் தான் ஐஸ்வர்யா என்கிற தீபிகா.
தீபிகா ஆரம்பத்தில் இந்த கதாபாத்திரத்தில் நடித்து விட்டு, அழகில்லை என வெளியேற்றப்பட்டார். இதனை தொடர்ந்து தற்போது இந்த கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்து வருகிறார்.
இப்படியான நிலையில், சமிபத்தில் இவர் கொடுத்த பேட்டியில் அதிர்ச்சியளிக்கும் ஒரு உண்மையை கூறியிருக்கிறார்.
பேட்டியில் உடைக்கப்பட்ட திரையுலக பின்னணி
அந்த பேட்டியில், “நான் முதலில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக அந்த ஆடிசனில் கலந்து கொண்டேன்.
அப்போது அங்கு யாரும் இல்லை. ஒரு ஆள் மட்டும் தான் இருந்தார், அங்கிருந்தவர் என்னை பார்த்து முத்த காட்சிகள் தான் அதிகம் இருக்கிறது.
அதனால் அதை தற்போது செய்து காட்ட வேண்டும்” என கேட்டார். இதனை கேட்ட நான்,“இப்படி என்னால் நடிக்க முடியாது வேறு காட்சிகள் இருந்தால் நடிக்கிறேன் என்று கூறிய போது, தற்போது தான் சுமார் 8 பெண்கள் இப்படி நடித்து சென்றிருக்கிறார்கள்.
உங்களுக்கு மட்டும் கொடுக்க முடியாது”என கூறினார். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, ஆடிசன் என்ற பெயரில் இப்படி பெண்கள் துஷ்பிரயோகம் செய்வது தற்போது பேஷனாகி விட்டது என கமண்ட் செய்து வருகிறார்கள்.