ஆஸ்கர் மேடையில்... கண்ணீர் சிந்திய தீபிகா படுகோன்....
இன்று நடைபெற்ற ஆஸ்கர் மேடையில் நடிகை தீபிகா படுகோன் கண்ணீர் சிந்திய வீடியோ வைரலாகி வருகிறது.
‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது
ஆஸ்கர் விருதுக்கு மொத்தம் 24 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து 3 பிரிவுகளில் படங்கள் தேர்வானது. சிறந்த பாடலுக்காக ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. இதற்கான விருதை பாடலாசிரியர் சந்திரபோஸூம், இசையமைப்பாளர் கீரவாணியும் பெற்றுக் கொண்டார்கள்.
கண்ணீர் சிந்திய தீபிகா படுகோன்
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆஸ்கர் நிகழ்ச்சி மேடையில், ‘நாட்டு நாட்டு’ பாடல் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டபோது பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார்.
மேடையில், ‘நாட்டு நாட்டு’ பாட்டு இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி மேடையில் ஏறி விருதை ஏற்றுக்கொண்டபோது தீபிகா உணர்ச்சிவசப்பட்டார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Tears of joy in #DeepikaPadukone when #RRR song won #Oscars pic.twitter.com/SPlsW83dch
— Harminder ??? (@Harmindarboxoff) March 13, 2023
Deepika cheer that #RRR & #NaatuNaatu got #Oscars
— Gaurav Pandey (@gaurav5pandey) March 13, 2023
And look that pride on #DeepikaPadukone face ❤❤ true Indian ???#Oscars #India #NTR#Oscars95 #JRNTR#Oscar #RRRForOscars pic.twitter.com/4AcxkXsqA2