சுகாதார ஊழியரை வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த மர்மநபர்! சிசிடிவியில் சிக்கிய காட்சி
மருத்துவமனை வளாகத்தில் நின்று தொலைப்பேசி பேசிக்கொண்டிருந்த பெண்ணை மர்ம நபரொருவர் வலுக்கட்டாயப்படுத்தி முத்தம் கொடுத்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மருத்துமனையில் நடந்த விபரீதம்
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்திலுள்ள ஜாமுய்யில் உள்ள சதார் மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் பெண்ணொருவர் மருத்துமனை வளாகத்தில் நின்று தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது மருத்துவமனைக்கு பின் பக்கத்திலிருந்து வந்த மர்ம இளைஞரொருவர் அங்கு நின்றுக் கொண்டிருந்த பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த மர்ம நபர் முத்தம் கொடுத்ததற்கு பிறகு நிற்காமல் அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார்.
இதனால் அதிக மன உளைச்சலுக்கு ஆளான குறித்த பெண், பக்கத்திலிருந்த பொலிஸாரிடம் புகார் கொடுத்துள்ளார்.
விசாரணையில் தெரிய வந்த உண்மை
இது தொடர்பான விசாரணையில், “ அந்த மர்ம நபர் குறித்து பெண்ணிற்கு எதுவும் தெரியாது என்றும். அவர் ஏன் அந்த நேரத்தில் மருத்துவமனைக்கு வந்தார் என்றும் எனக்கு தெரியாது.” என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து , நான் மருத்துவமனைக்கு அறிவித்துள்ளேன். எனக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் நடக்க கூடாது என்பதற்காக மருத்துவமனையை சுற்றி முள் கம்பி போடமாறு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.” எனவும் கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த நெட்டிசன்கள், “ இது போன்ற துஷ்பிரயோகங்களை வன்மையாக கண்டிக்க வேண்டும்.“ என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.