நிறைவுக்கு வருகின்றதா பாண்டியன் ஸ்டோரஸ்? அடுத்தடுத்து நிறைவேறும் தனத்தின் கடைசி ஆசைகள்!
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனம், அவரின் கடைசி ஆசைகளை நிறைவேற்றி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
தனத்திற்கு மார்பு பகுதியில் சிறிய வலி இருக்கின்றது என மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதனைகளின் முடிவில் தனத்திற்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரியவந்துள்ளது.
பரிசோதனைக்கு செல்லும் போது மீனாவிற்கு விஷயம் தெரிந்து விட்டது. ஆனால் இந்த விடயத்தை வீட்டில் யாருக்கும் தெரியக்கூடாது என தனம் மீனாவிடம் சத்தியம் வாங்கி கொள்கிறார்.
தர்ம சங்கடத்திற்கு ஆளாகிய மீனா, தனத்திற்காக அத்தனை விடயங்களையும் மறைகிறார். ஆனால் தனத்தின் முகத்தை பார்த்தால் ஏதோ இருகிறது என்பது தெளிவாகின்றது.
தனத்தின் முதல் ஆசை
இந்த நிலையில் தனத்தின் வயிற்றுள்ள குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுத்து விட்டு புற்றுநோயிற்கான சிகிச்சையை ஆரம்பிக்கும் படி மருத்துவர் கூறிவிட்டார்.
சிகிச்சைக்கு செல்லும் முன்னர் கோயிலில் வைத்து மீனாவிடம் சத்தியம் வாங்கி கொள்கிறார். ஏனெனின் அவர் செய்ய வேண்டிய வேலைகள் இருக்கின்றது.
அந்த வகையில் தனத்தின் முதல் ஆசையாக ஐசுவின் வளைகாப்பு நிகழ்வு கோலாகலமாக இடம்பெறுகின்றது.
இதில் சொந்தங்கள் அணைவரும் கலந்து கொள்கிறார்கள். இதனை தொடர்ந்து இவ்வாறு பாண்டியன் ஸ்டோரஸ் தொடர் நகர்வதை பார்த்தால் நிறைவிற்கு வந்து விட்டது என ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |